[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு
  • BREAKING-NEWS பி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்?- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்
  • BREAKING-NEWS தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசுப்பேருந்துகள் நிறுத்தம்
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்- தமிழக அரசு

ஐசிசியின் சிறந்த வீரர்  விருதுக்கு  கோலி தேர்வு

kohli-re-claims-odi-award

ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது அளிக்கப்படுகிறது. ஐசிசியின் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்தாண்டு 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 1,460 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 7 அரை சதங்கள் அடங்கும். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து  தோனி விலகியதையடுத்து கோலி மூன்று விதமாக கிரிக்கெட் போட்டிக்கும் தலைமை தாங்கி அணியை வழிநடத்தி வருகிறார். 

ஐசிசியின்  2017ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close