[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாப்பது நமது கடமை - முதல்வர் பழனிசாமி
 • BREAKING-NEWS தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS குழந்தையை வளர்ப்பதுபோல் காளையை வளர்க்கின்றனர்- முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS எழுத்தாளர் ஞாநியின் மறைவு பத்திரிகையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் - டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS எந்தக்கருத்தையும் எந்த சமயத்திலும் துணிச்சலுடன் கூறக்கூடிய பேராண்மை பெற்றவர் எழுத்தாளர் ஞாநி -திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS தனக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர் ஞாநி - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS ராணுவ தினத்தையொட்டி இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து
 • BREAKING-NEWS மதுரை: பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
 • BREAKING-NEWS மதச்சார்பற்ற இயக்கம் அதிமுக; உயிரோட்டம் உள்ள இயக்கம் அதிமுக- முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம்- முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 248 காளைகள் களம் இறங்கின
 • BREAKING-NEWS 6 நாள் அரசு முறை பயனமாக டெல்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
 • BREAKING-NEWS நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராவார்- திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS சமூகவலைதளங்களில் தரக்குறைவாக மீம்ஸ் போடுவது என்பது தவறான செயல்- அமைச்சர் ஜெயக்குமார்
விளையாட்டு 13 Jan, 2018 09:57 AM

போல்ட் வேகத்தில் பாகிஸ்தான் சரண்டர்: 74 ரன்களுக்கு சுருண்டது!

new-zealand-won-by-183-runs-against-pak

நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இரண்டு போட்டிகளிலும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டுனிடினில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் அந்த அணி, 257 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் குப்தில் 45 ரன்னும் கேப்டன் வில்லியம்சன் 73 ரன்னும் ராஸ் டெய்லர் 52 ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ரும்மான் ரேயிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சதாப் கான் 2 விக்கெட்டையும் அஷ்ரப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான அசார் அலி ரன் எதுவும் எடுக்காமலும் பஹார் ஜமான் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களின் விக்கெட்டை போல்ட் கபளீகரம் செய்தார். அடுத்து வந்த பாபர் அசாம், 8 ரன்னில் ரன் அவுட் ஆனார். அனுபவ வீரர்கள் முகமது ஹபீஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சோயிப் மாலிக் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றினர். சதாப் கானும் டக் அவுட்டாக, வெறும் 16 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது.

கேப்டன் சர்பிராஸ் அகமது பொறுமையாக ஆடினாலும் மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. அடுத்த வந்த அஷ்ரப் 10 ரன்னிலும் ஹசன் அலி ஒரு ரன்னிலும் முகமது ஆமிர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரேயிஸும் சர்பிராஸும் கவுரவமான தோல்வியை சந்திக்க போராடி வந்தனர். ரேயிஸ் அதிரடியாக ஆடி,14 ரன்கள் சேர்த்தார். இதனால் மிகக் குறைந்த ஸ்கோரில் அவுட் ஆவதில் இருந்து பாகிஸ்தான் அணி தப்பியது. அந்த அணி, 27.2 ஓவரில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி, 183 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 

பாகிஸ்தானின் மிகக் குறைந்த ஸ்கோர் 43. 1993-ம் ஆண்டு கேப்டவுனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ரன்னை எடுத்தது. ஒட்டு மொத்தமாக, ஜிம்பாப்வே அணி, மிக குறைந்த ஸ்கோரை எடுத்துள்ளது. 2004-ல் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் 35 ரன்களில் அந்த அணி சுருண்டது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close