[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
விளையாட்டு 06 Jan, 2018 07:32 AM

புவி வேகத்தில் சரிந்த தென்னாப்பிரிக்கா: ஏமாற்றிய இந்திய வீரர்கள்!

sa-returns-the-compliment-with-triple-strike

இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் வேகத்தில் தென்னாப்பிரிக்கா அணி 286 ரன்களுக்குள் சுருண்டது. பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே 12 ரன்கள் எடுப்பதற்குள் தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 3 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர்குமார் சாய்த்தார். எல்கர்(0), மர்க்ரம்(5), ஹசிம் அம்லா(3) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்தார். பின்னர் டிவில்லியர்ஸ் மற்றும் கேப்டன் டூபிளிசிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். டிவில்லியர்ஸ் 65 ரன்களில் பும்ராவின் பந்து வீச்சில் போல்டானார். இது பும்ராவில் முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.

சிறிது நேரத்தில் டூபிளிசிஸ் 62 ரன்னின் ஆட்டமிழந்தார். அதற்கு பின் வந்த வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி  286 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 43, பிலண்டர் 23, மகராஜ் 35, ரபடா 26, ஸ்டெயின் 16, மோர்கல் 2 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸிசை தொடங்கிய இந்திய அணி, 28 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. முரளி விஜய், ஷிகர் தவான், கேப்டன் விராத் கோலி ஆகியோர் ஆட்டமிழந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்கிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close