[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

கிரிக்கெட் என் ரத்தத்துல இருக்கு: விராத் கோலி!

cricket-is-in-my-blood-virat-kohli

'கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறியது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு  நேற்று புறப்பட்டது. 

முன்னதாக விராத் கோலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘திருமணம் முடிந்த கையோடு அணிக்கு திரும்பியிருக்கிறேன். திருமணமும் முக்கியம். மூன்று வாரங்களாக கிரிக்கெட் விளையாடாமல் அணிக்குத் திரும்பி இருப்பது பற்றி கேட்கிறார்கள். இதில் எனக்கு கஷ்டம் ஏதும் இல்லை. ஏனென்றால் கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறியது.

தென்னாப்பிரிக்க தொடருக்காக மன ரீதியில் தயாராகவே இருக்கிறேன். அங்கு ஒர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். அணியின் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தென்னாப்பிரிக்க சூழல்கள் சவால்களை தரக்கூடியவை. கிரிக்கெட் பந்துக்கும், பேட்டுக்கும் இடையிலான விளையாட்டு. பேட்ஸ்மென்களின் மனநிலையைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். மனத்தளவில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அப்படித் தயாராகிவிட்டால் அனைத்துமே உள்நாட்டு சூழல் போலவே தெரியும்’ என்றார்.

பின்னர் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றது. விராத் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவையும் உடன் அழைத்துச் சென்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close