[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஐ.பி.எல்: மும்பை அணிக்கு 2 வது வெற்றி

ipl-mumbai-won

ஒன்பதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி, மும்பை அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 37 ரன்களும், கேப்டன் விராட் கோலி 33 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 171 ரன்கள் ‌இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சீரான வேகத்தில் ரன்களை குவித்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். மும்பை அணி 4 விக்கெட்களை இழந்த நிலையில், 18ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய போல்லார்ட் 19 பந்துகளில் ‌ 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களை குவித்து வெற்றிக்கு உதவினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close