[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

தோனியை விமர்சிப்பவர்கள் கண்ணாடி முன் நின்று தங்களை கேட்கட்டும்: ரவி சாஸ்திரி காட்டம்!

ravi-shastri-backs-ms-dhoni

’தோனியை கேள்விக் கேட்பவர்கள் அவரது வயதில் தாங்கள் என்ன செய்தோம் என்பதை கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாகக் கூறினார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ’கடந்த 30-40 வருடங்களாக கிரிக்கெட்டை கவனித்து வரும் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இந்த 36 வயதில் 26 வயது இளைஞர்களை விட வேகமாக செயல்படுகிறார் தோனி. அவரது வேகமான செயல்பாட்டை நாங்கள் அறிவோம். அவரை விமர்சிப்பவர்கள், அவர் வயதில் தாங்கள் என்ன செய்தோம் என்பதை கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும். அவர்களால் 2 ரன்கள் எடுக்க வேகமாக ஓடியிருக்க முடியுமா? அப்படி அவர்கள் ஓடியிருந்தால் தோனி, 3 ரன்கள் ஓடியிருப்பார். அதோடு தோனி, இரண்டு உலகக் கோப்பைகளை (டி20 மற்றும் ஒரு நாள் போட்டி) வென்று தந்தவர். அவரது சராசரி 51. இன்றுவரை, ஒரு நாள் போட்டிக்கு அவருக்கு மாற்றாக நம்மிடம் விக்கெட் வீப்பர் இல்லை. உலக அளவில் அவர்தான் சிறந்த விக்கெட் கீப்பர். டெஸ்ட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று விட்டதால், 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் முடிந்த வரை அவர் அதிகம் விளையாட வேண்டும்’ என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close