[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

முதல் டி20 போட்டியில் களமிறங்கினார் வாஷிங்டன் சுந்தர்

young-washington-sundar-is-all-set-to-make-his-t20i-debut-in-wankhede

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கியுள்ளார். 

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இலங்கை அணி 18 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 11.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இந்தப் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இது அவரது முதலாவது சர்வதேச டி20 போட்டி ஆகும். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் தனது முதல் போட்டியில் களமிறங்கி இருந்தார். இந்த போட்டியில் மூன்றாவது ஓவரை வீசிய சுந்தர் எம்.டி.கே.ஜே. பெராராவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார்.

ஏற்கனவே முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. அதேபோல், தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் இலங்கை அணியும் விளையாடி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close