[X] Close
JUST IN
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
 • BREAKING-NEWS கோவில்பட்டியில் பாலத்தின் மீது வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
 • BREAKING-NEWS சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞருமான எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்- மம்தா பனர்ஜி
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போரட்டம் 23 ஆவது நாளாக தொடர்கிறது
விளையாட்டு 22 Dec, 2017 06:05 PM

2017ல் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களில் கோலி முதலிடம்

virat-kohli-becomes-top-indian-sports-personality-of-the-year-earns-rs-100-crore

2017 ஆம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியிலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ. 100.72 கோடி வருமானம் ஈட்டி முதல் இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் இந்திய அளவில் அதிக வருமானம் ஈட்டியுள்ள பிரபலங்கள் பட்டியலில் கோலி 3 ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் ரூ. 232.8 கோடியும், ஷாரூக் கான் ரூ. 170.5 கோடியும் சம்பாரித்து முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இதே மூன்று பேர் கடந்த ஆண்டும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

இந்த ஆண்டு சல்மான் கான் மற்று ஷாரூக் கான் ஆகியோரின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், கோலியின் வருமானம் அதிகரித்துள்ளது. வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கோலிக்கு அடுத்த இடத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் (ரூ.82.50 கோடி) உள்ளார். மூன்றாம் இடத்தில் தோனி (ரூ.63.77 கோடி), நான்காம் இடத்தில் பி.வி.சிந்து (ரூ.57.25 கோடி) ஆகியோர் உள்ளனர்.

2017ஆம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டியுள்ள 21 இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியல்: 

 1. விராட் கோலி ரூ. 100.72 கோடி
 2. சச்சின் டெண்டுல்கர் ரூ. 82.50 கோடி
 3. எம்.எஸ்.தோனி ரூ. 63.77 கோடி
 4. பி.வி.சிந்து ரூ. 57.25 கோடி
 5. ஆர்.அஸ்வின் ரூ. 34.67 கோடி
 6. ரவீந்திர ஜடேஜா ரூ. 34.58 கோடி
 7. சாய்னா நேவால் ரூ. 31.00 கோடி
 8. ரோஹித் சர்மா ரூ. 30.82 கோடி
 9. ஷிகர் தவான் ரூ. 15.94 கோடி
 10. அனிர்பன் லாஹிரி ரூ. 12.44 கோடி
 11. யுவராஜ் சிங் ரூ. 11.60 கோடி
 12. கே.ஸ்ரீகாந்த் ரூ. 6.13 கோடி
 13. ஏ.ரஹானே ரூ. 5.56 கோடி
 14. சி.புஜாரா ரூ. 5.48 கோடி
 15. முரளி விஜய் ரூ. 4.20 கோடி
 16. கே.எல்.ராகுல் ரூ. 4.04 கோடி
 17. உமேஸ் யாதவ் ரூ. 3.94 கோடி
 18. ஹர்திக் பாண்டியா ரூ. 3.04 கோடி
 19. சானியா மிர்சா ரூ. 2.80 கோடி
 20. புவனேஷ்வர் குமார் ரூ. 2.53 கோடி
 21. சுனில் சேத்ரி ரூ. 2.30 கோடி
Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close