[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் சுஷில்குமார்

sushil-kumar-wins-gold-at-commonwealth-wrestling

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஒலிம்பிக் பதக்க நாயகன் சுஷில்குமார் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற இன்று 74 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சுஷில்குமார் மற்றும் நியூசிலாந்து வீரர் ஆகாஷ் குல்லர் ஆகியோர் மோதினர். இதில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்ற சுஷில்குமார், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சுஷில்குமாருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. காமல்வெல்த் போட்டியில் சுஷில்குமார் தங்கம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும். நீண்ட இடைவேளைக்கு பின் சர்வதேச போட்டியில் பங்கேற்ற சுஷில்குமார் தங்கம் வென்றுள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுஷில்குமார், “3 வருடங்களுக்கு பிறகு காமல்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது பெருமையாக உள்ளது. இந்த வெற்றியை நான் எனது குரு மற்றும் எனது நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன். ஜெய் ஹிந்த்!” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close