[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு 

fantastic-moment-in-my-career-cristiano-ronaldo-ecstatic-after-record-ballon-d-or-triumph

2017ஆம் ஆண்டின், சிறந்த கால்பந்து வீரருக்கான பாலன் டி ஆர் விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரோனால்டோ ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். 

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. இவர் ரியல் மேட்ரிட் அணிக்காகவும், போர்சுகல் தேசிய கால்பந்து அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தாண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்த விருதை 5வது முறையாக ரொனால்டோ கைப்பற்றுகிறார். இதன்மூலம் ஐந்து முறை இந்த விருது வென்றிருந்த மெஸ்சியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.  32 வயதான ரொனால்டோ, ஏற்கனவே 2008, 2013, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் பாலன் டி ஆர் விருதினை வென்றிருந்தார்.இந்த விருதை பெற ரொனால்டோ அவரது தாயான மரியா டோலோரெஸுடனும் அவரது மூத்த மகனான கிறிஸ்டியானோ ஜூனியருடனும் வந்திருந்தார்.

இதன்பின்னர் பேசிய ரொனால்டோ, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அது என் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணம் என்று ரொனால்டோ கூறினார். இந்த வருடம் நாங்கள் சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா கோப்பைகளை வென்றிருக்கிறாம். சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியில்  நான் சிறந்த வீரராக இருந்தேன். நான் பெறும் கோப்பைகள் இது போன்ற பரிசை வெல்ல எனக்கு உதவுகின்றன. மாட்ரிட் மற்றும் போர்ச்சுகல் அணிகளில் உள்ள சக வீரர்களுக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கு மிகவும் முக்கியம். என ரொனால்டோ பேசினார்.
 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close