[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

கோலி ஸ்டைலே தனி: புஜாரா

can-t-match-kohli-s-strike-rate-pujara

’விராத் கோலியின் ஸ்டைல் தனித்துவமானது. மூன்று விதமான போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கூறினார்.

நாக்பூரில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் விராத் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமடித்தார். புஜாரா 143 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, ‘இரண்டு வருடங்களாக பிட்னஸுக்காக கடுமையாக பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த காலங்களில் காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். இப்போது நான் ’ஃபிட்’டாக இருக்கிறேன். விராத் கோலி மாதிரி, மற்றவர்கள் ஏன் ஆட முடிவதில்லை என்று கேட்கிறார்கள். அவர் ஸ்டைல் தனித்துவமானது. மூன்று விதமான போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை போல மற்றொரு வீரர் ஆட முடியுமா என்பது சந்தேகம்தான்.

கோலியின் நம்பிக்கையும் விளையாடும் முறையும் அவருக்கு வலு சேர்க்கிறது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவரது பேட்டிங் சராசரி உயர்ந்திருக்கிறது. அதை மற்ற வீரர்கள் எட்டுவது கடினம்தான். அடுத்து ஜனவரியில் நடக்கும் தென்னாப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடுவேன் என நினைக்கிறேன். அந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப ஆடுவதற்கான அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் அங்கு 2010 மற்றும் 2013ம் ஆண்டுகளில் விளையாடி இருக்கிறேன்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close