[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: கொல்கத்தா அணியை வீழ்த்தியது மும்பை

ipl-cricket-mumbai-beat-kolkata

ஐபிஎல் நடப்பு சீசனில் மும்பை இண்டியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கவுதம் கம்பீர் 64 ரன்களும், மணீஷ் பாண்டே 29 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். ஆண்ட்ரே ரஸ்ஸல் 17 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். மெக்ளேனகன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய மும்பை அணிக்கு, ரோகித் ஷர்மாவும், பார்த்தீவ் படேலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். பார்த்தீவ் படேல் 23 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பேட்டிங் வரிசையில் முன்னதாகவே களமிறங்கிய மெக்ளேனகன் 8 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். 4-வது விக்கெட்டுக்கு ரோகித்துடன் இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்த ஜோ பட்லர் 41 ரன்களில் வெளியேறினார். மும்பை அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. ரோகித் ஷர்மா 84 ரன்களுடன் ஆட்டமிழக்கமல் இருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close