[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
விளையாட்டு 18 Nov, 2017 07:36 AM

4வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சல்மான் கான், கேத்ரினா டான்ஸ்

salman-khan-katrina-kaif-to-perform-in-isl-opening-ceremony

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கேரள மாநிலம் கொச்சியில் கோலாகலமாகத் தொடங்கியது. 

நான்காவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து திருவிழா கொச்சியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி., பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டியின் தொடக்க விழா கொச்சியில் நேற்று நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை கேத்ரினா கைப் ஆகியோர் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், பிரபல நடிகர் மம்முட்டி ஆகியோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ஐஎஸ்எல் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நீட்டா அம்பானியிடம் மும்முட்டி கால்பந்தை வழங்க முறைப்படி போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் எந்த அணியும் கோல் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெறும் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close