[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்

indian-super-league-2017

கால்பந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நான்காவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது.

கொச்சியில் நடைபெறும் முதல் போட்டியில்  இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், சச்சினை உரிமையாளராக கொண்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு எட்டு மணிக்குத் தொடங்குகிறது. 

முதல் மூன்று சீசன்களில் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் தற்போது கூடுதலாக பெங்களூரு எஃப்.சி, ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணிகள் நடப்புத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த சீசனில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இம்முறை ஆடும் லெவனில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையின் எஃப்சி அணி வரும் 19 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் கோவா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close