[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு
  • BREAKING-NEWS சென்னை போர் நினைவுச் சின்னத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்துள்ளது
  • BREAKING-NEWS கச்சதீவு புனித அந்தோணியார் கோயிலின் 2 ஆம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது

பிறந்தநாள் கொண்டாடிய சானியா மிர்ஸா: வாழ்த்திய தமிழ் நடிகை

sania-mirza-turns-31-husband-shoaib-malik-sends-sweet-message

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது 31ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். 

டென்னிஸ் நாயகி சானியா மிர்ஸா, கிராண்ட்ஸ்லாம் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவிலும். கலப்பு இரட்டையர் பிரிவிலும் தலா 3 பட்டங்களை வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 100 சிறந்த வீரர்களின் பட்டியலில் சானியா இடம் பெற்றிருந்தார். இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

சானியா மிர்சா தனது 31ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். கணவர் சோயிப் மாலிக், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் சானியா மிர்சாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

                                   

மேஜிக்கல் பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக சோயிப் மாலிக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                        

அதேபோல், தமிழ் நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் சானியா மிர்ஸாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்ஸா தற்போது செக் குடியரசைச் சேர்ந்த பார்போரா ஸ்டரிகோவா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஷூவாய் பெங் உடன் இணைந்து விளையாடி வருகிறார். காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சில வாரங்கள் ஓய்வு பெற வேண்டியிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close