[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
விளையாட்டு 06 Nov, 2017 07:56 AM

பயிற்சிக்கு செல்லாதது ஏன்? விளக்குகிறார் பும்ரா

why-the-team-skipped-practice-ahead-of-the-second-t20

நாங்கள் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இரண்டாவது டி20-போட்டிக்கு முதல் நாள், பயிற்சியில் பங்கேற்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மூன்றாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறும்போது, ’கடந்த போட்டியில் முகமது சிராஜ் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருக்கு இது தான் முதல் சர்வதேச போட்டி. சவாலான ஆடுகளத்தில் பந்து வீசுவது கடினம்தான். அவர் இங்குள்ள நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள அவகாசம் தேவைப்படும். இந்த ஆட்டத்தில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வார். தற்போது கிடைத்துள்ள அனுபவத்தில் இருந்து அடுத்து வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார். போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சியில் ஈடுபடாதது பற்றி கேட்கிறார்கள். நாங்கள் தொடர்ச்சியாக விளையாடி வருவதால், எங்களுக்கு ஓய்வு அவசியம். அதற்காக ஓட்டலில் சும்மா தூங்கிக்கொண்டு இருக்கவில்லை. அங்கும் பயிற்சி செய்தபடி இருந்தோம். இந்த போட்டியில் வென்றிருந்தால் இது போன்ற கேள்விகள் எழுந்திருக்காது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close