[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

ஐ.பி.எல். கிரிக்கெட் : வெற்றியை தொடங்கிய தோனியின் புனே அணி; ஊக்கப்படுத்தும் சாக்ஸி

ipl-cricket-2016-ms-dhoni-pune-off-to-winning-start-sakshi-cheers-from-stands

ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுக அணியாக களமிறங்கியுள்ள RISING PUNE SUPERGIANTS 9-வது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றியை வசப்படுத்தியது.

மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த நகர அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் விளாசினார். அம்பத்தி ராயுடு 22 ரன்கள் எடுத்தார். புனே அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா, மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆர்.பி.சிங், ரஜத் பாட்டீயா, அஷ்வின், அறிமுக வீரராக களமிறங்கிய முரளி அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய புனே அணிக்கு, ரஹானே டூபிளஸ்ஸி ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 78 ரன்கள் சேர்த்தனர். டூபிளஸ்ஸி 34 ரன்களில் வெளியேறினார். ரஹானே 32 பந்துகளில் அரைசதம்‌ விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு ரஹானே-வுடன் களமிறங்கிய பீட்டர்சென்-னும் வேகமாக ரன்கள் சேர்க்க, புனே அணி 15-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.‌ ரஹானே 66 ரன்களுடனும், பீட்டர்சென் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தோனியை ஊக்கப்படுத்தும் சாக்ஸி:

2016 ஐபிஎல் போட்டி தொடரில் மகேந்திர சிங் தோனி புதிய அணியின் கேப்டனாக உள்ளார். கடந்த 8 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டுவிட்டது. இதனால் Rising Pune SuperGiants அணியில் தனது புதிய பயணத்தை தோனி தொடங்கியுள்ளார். இந்நிலையில் தோனியின் பக்கலமாக இருந்து அவரது மனைவி சாக்ஸி ஊக்கப்படுத்தி வருகிறார். சாக்ஸி தனது டுவிட்டரில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுடன் இணைந்து எடுத்த போட்டவுடன், ‘IPL fever begins’ என்று டுவிட் செய்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close