[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

சாதனையை தவறவிட்ட கோலி

australia-ends-virat-kohli-s-winning-marathon

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாதனையை சமன் செய்திருந்த கோலி, அதனை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் அளித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் பெங்களூரில் நேற்று நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 9 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. இதனை சமன் செய்திருந்த கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி தோல்வி அடைந்து சாதனையை தவறவிட்டது. தரநிலையிலும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close