[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
விளையாட்டு 24 Sep, 2017 01:40 PM

தோனி தலைமை பண்புக்கு கிடைத்த முதல் கிரீடம்..டி20 கோப்பை..!

on-this-day-10-years-ago-ms-dhoni-led-team-india-won-inaugural-world-t20

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 10 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் தான் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. இது தோனியின் தலைமை பண்புக்கு கிடைத்த முதல் கிரீடம் ஆகும்.

சிறந்த கேப்டன் என்று எல்லோராலும் பாராட்டப்பெற்ற தோனி, அந்த பெயரை பெறுவதற்கு நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. ஏனென்றால், தோனிக்கு அதிகம் அதிர்ஷ்டம் இருப்பதாகவே முதல் பலரும் கூறினர். இருப்பினும் முதல் டி20 
உலகக் கோப்பையை கைப்பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த தொடரை வெல்வதற்கு யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம், கம்பீரின் நிதான ஆட்டம் என பல காரணங்கள் இருந்தாலும் தோனி முடிவெடுக்கும் தன்மை தான் அதில் முக்கிய பங்கு வகித்தது. குறைந்த அளவு ரன் எடுத்த போதும் மனம் தளராமல் எதிரணியை இறுதிவரை போராடி தோற்கடித்தார். யாருமே எதிர்பார்க்காத போட்டியில் வெற்றியை சாத்தியமாக்கி காட்டினார்.

2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து உடன் டி பிரிவில் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் இந்த தொடர் நடைபெற்றது. ஸ்காட்லாந்து உடனான முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், முதலில் விளையாடிய இந்திய அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணியை 141 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பின்னர், போட்டி பந்து வீச்சு முறைப்படி முடிவு காணப்பட்டது. இதில் இந்திய வீரர்களின் துள்ளியமான பந்துவீச்சால் வெற்றி சாத்தியமானது.

இதனையடுத்து சூப்பர் 8 பிரிவில் இந்திய அணி ஈ பிரிவில் இடம்பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்விஅடைந்த போதும், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி நுழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தான் யுவராஜ் சிங் 6 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசினார்.

இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். கம்பீர் மட்டும் நிலைத்து ஆடி 75 ரன்கள் சேர்க்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது கேப்டன் மிஸ்பா உல் ஹாக் மட்டும் நின்று ஆடினர். இதனால், கடைசி ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது. 

கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவுக்கு தோனி கொடுத்தார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் முதல் பந்தையே ஜோகிந்தர் சர்மா ஒயிடாக வீசினார். அடுத்த பந்தில் மிஸ்பா ஒரு சிக்ஸர் விளாசினார். இதனால் கடைசி 4 பந்தில் வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் உறுதியாக நினைத்தனர். ஆனால் அதிரடியாக விளையாடியை மிஸ்பாவை 3-வது பந்தை ஸ்வீப் ஷாட் அடித்தார். அதனை ஸ்ரீசாந்த அற்புதமாக கேட்ச் செய்தார். இதனால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close