[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய பாஜக கட்சி அலுவலகத்தை டெல்லியில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்
  • BREAKING-NEWS நாகை: அவுரி திடல் அருகே ஆளுநருக்கு எதிராக திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி
  • BREAKING-NEWS சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு
  • BREAKING-NEWS திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96

சாஹல் பந்துவீச்சு: புகழ்கிறார் ஆஸி.வீரர்!

agar-praises-chahal

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

போட்டி பற்றி, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் கூறும்போது, ’இந்தப் போட்டியில் தவான் ஆடாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும். இடது கை பேட்ஸ்மேனான தவான் ஆடாததால் அக்‌ஷர் பட்டேல் தவிர இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லை. இடது, வலது கை ஆட்டக்காரர்கள் கொண்ட ஜோடிக்கு எதிராக பந்து வீசுவது கடினம். எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அவர் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். 2 வது சுழற்பந்து வீச்சாளர் தேவை என்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். 
எங்கள் அணியின் ஆடம் ஜம்பா, இந்தியாவின் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடியவர்கள். அதுவும் சிறப்பாக பந்துவீசுபவர்கள். அவர்கள் இந்த போட்டி தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் பந்தை இருபுறமும் திருப்பக்கூடிய திறமைசாலிகள். இரவு நேரத்தில் அவர்களது பந்து வீச்சை கணித்து சரியாக ஆடுவது என்பது கடினம்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close