[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பெண்கள் பிரிவில் இன்று நடைபெறவுள்ள போட்டிகள்..

t-20-women-s-worldcup-cricket-today-matches

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பெண்கள் பிரிவில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஏ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய பெண்கள் அணி, அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது. மூன்றாவது வெற்றிக்கான முனைப்புடன் ஆஸ்திரேலிய அணியும், ஆறுதல் வெற்றிக்கான நோக்கில் அயர்லாந்து அணியும் களம் காண்கின்றன.

ஏ பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் தென்னாப்ரிக்க பெண்கள் அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளும் விளையாடும் போட்டி பெங்களூருவில் இரவு ஏழரை மணிக்குத் தொடங்கவுள்ளது.

தென்னாப்ரிக்க அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால்‌ 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close