[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்

icc-world-twenty20-2016-west-indies-win-by-three-wickets-progress-into-the-semis

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நாக்பூரில் நேற்று நடந்த போட்டியில் தென்னாப்ரிக்க அணியை வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த தென்னாப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குவிண்டன் டிகாக் 47 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெய்ல், ரஸ்ஸல், badree சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் ஓவரிலேயே கிறிஸ் கெயிலின் விக்கெட்டை இழந்தது. எனினும் சார்லஸ் மற்றும் சாமுவேல்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 2 ‌பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை தொட்டது. சார்லஸ் 32 ரன்னும் சாமுவேல்ஸ் 43 ரன்னும் எடுத்‌தனர். லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றது மூலம் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close