[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
விளையாட்டு 26 Aug, 2017 07:55 AM

டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்தார், ஜோ ரூட்

joe-root-equals-de-villiers-record

தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் உலக சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் நேற்று சமன் செய்தார். 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, ஸ்கோர் 71 ரன்களை எட்டுவதற்குள் 4 முன்னணி வீரர்களை இழந்தது. 
இதன் பின்னர் ஜோ ரூட்டும், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து ஓரளவு மீட்டனர். ஜோ ரூட் 59 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் தொடர்ச்சியாக 12 டெஸ்டுகளில் ஏதாவது ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் (தென்னாப்பிரிக்கா) உலக சாதனையை சமன் செய்தார். 

மறுமுனையில் 6-வது சதத்தை நிறைவு செய்த பென் ஸ்டோக்ஸ் 100 ரன்களில் அவுட் ஆனார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச், கேப்ரியல் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. பரத்வைட்டும் பாவெல்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆண்டர்சன் பந்துவீச்சில் பாவெல் 5 ரன்களில் வெளியேறினார். மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்களை எடுத்திருந்தது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close