[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைகிறது?
  • BREAKING-NEWS ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை
  • BREAKING-NEWS அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
  • BREAKING-NEWS 300 ரன்களை விளாசுவார்கள் என்று நினைத்தோம்: கோலி
  • BREAKING-NEWS சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததாக கூறப்படும் வீடியோ வெளியானது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை
  • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
  • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
விளையாட்டு 13 Aug, 2017 08:33 AM

தவானுக்கு பட்டப்பெயர் வைத்த டீம்!

bat-like-a-king-get-out-like-a-king

இலங்கை அணியுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த தவானுக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் பட்டப்பெயர் ஒன்றைச் சூட்டியுள்ளனர்.

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டின் முதல்நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்துள்ளது. கண்டியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு ராகுல்-தவான் ஜோடி 188 ரன்கள் சேர்த்தது. தவான் 107 பந்துகளில் சதமடித்து 119 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய தவான், ‘ இந்தப் போட்டியிலும் சதமடித்ததில் மகிழ்ச்சி. இப்போது இந்திய அணி வீரர்கள் எனக்கு புது பெயர் தந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. அது என்ன பெயர் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். நானும் ராகுலும் சிறப்பாக ஆடினோம். நாங்கள் அவுட்டானது பிட்ச் காரணமாக அல்ல. இலங்கை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இலங்கையின் சைனாமேன் வகை பந்துவீச்சாளர் லஸ்கன் சண்டகனும் புஷ்பகுமாராவும் சிறப்பாக பந்துவீசினார்கள். ராஜா மாதிரி ஆடினால், ராஜா மாதிரியே வெளியேற வேண்டும் என்று விளையாட்டாகச் சொல்வேன். அப்படியே நான் அவுட்டாக வேண்டும். சில்லியில் நின்றோ, தடுப்பாட்டத்திலோ அவுட்டாவதை நான் விரும்பமாட்டேன்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close