[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

உள்துறை அமைச்சரின் முடிவுக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

pakistan-team-s-india-departure-stopped-temporarily

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் புறப்பாடு குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் முடிவு செய்வார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று பிற்பகல், லாகூரில் இருந்து டெல்லி புறப்பட இருந்தது.

இதனிடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை, மொஹாலி அல்லது கொல்கத்தாவுக்கு மாற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.சி.சி.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தர்மசாலாவில் வரும் 19ஆம்‌தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள, இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது கடினம் என ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீர்பத்ர சிங் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த மூவர் குழு, தர்மசாலாவில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி, அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்துள்ளது. எனினும், இந்தியா, பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close