[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

117 ஆண்டுகள் நீடித்த உலகச் சாதனையை முறியடித்த குஜராத் கிரிக்கெட் வீரர்

gujarat-s-samit-gohel-creates-world-record-for-highest-score-by-opener

உலக அளவில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஒடிஷா அணிக்கெதிரான ரஞ்சிக் கோப்பை காலிறுதிப் போட்டியில் குஜராத் வீரர் சமித் கோஹெல் படைத்தார்.

26 வயதான கோஹெல், 359 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற பாபி ஏபெலின் 117 ஆண்டு சாதனையை அவர் முறியடித்தார். இங்கிலாந்தின் சர்ரெ அணியைச் சேர்ந்த ஏபெல், சோமர்செட் அணிக்கெதிராக கடந்த 1899-ல் 357 ரன்கள் குவித்திருந்ததே முதல்தர கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

கோஹெல், 359 ரன்கள் குவிக்க 723 பந்துகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த ஸ்கோரில் 45 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன்மூலம் குஜராத் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 641 ரன்கள் குவித்து, ஒடிஷா அணிக்கு 706 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நடப்பு ரஞ்சிக்கோப்பைத் தொடரில் முச்சதம் அடிக்கும் ஐந்தாவது வீரர் கோஹெல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close