[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ரியோ ஒலிம்பிக் 2016: திறமையாளர்களால் சாதிக்க முடியாததை சாதித்த மாற்றுத் திறனாளிகள்

rio-olympics-2016-physically-challenged-people-achievements

ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற 31-வது ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி மிகப்பெரிய படையை திரட்டி கொண்டு சென்றது. சுமார் 63 வீரர்கள் 54 வீராங்கனைகளுடன் ஒலிம்பிக்கில் 15 போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்க சென்றது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக சாய்னா நெவால், அபினவ் பிந்த்ரா, சானியா மிர்சா, யோகேஸ்வர் தத், லியாண்டர் பயஸ், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்றனர். இதனால் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஏராளமான பதகங்கள் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர்.

இந்திய அணி வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஹாக்கி, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, ரோவிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல் போட்டி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், மல்யுத்தம், பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றது. ஆனால் போட்டி தொடங்கிய சில நாட்களிலே இந்திய ரசிகர்களின் கனவு, கனவாகவே கலைந்தது. மிகப்பெரிய பெரிய வெற்றியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எதோ ஆறுதல் வெற்றி போன்று இரண்டு பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன. அதுவும் வெள்ளியும், வெண்கலமும்.

ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் பதக்கங்களைக் குவித்து ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்கினர். இறுதி வரை களத்தில் உறுதியுடன் போராடி நாட்டிற்காக தங்கப்பதக்கம் குவித்தனர். மனதில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை நிருபித்தனர்.

ஒலிம்பிக் போட்டியில் அடைந்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் வகையில் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள் 2 தங்கம்,1 வெள்ளி,1 வெண்கலம் வென்றனர்.

உயரம் தாண்டுதல்:

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் பாட்டி ஆகியோர் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மற்றொரு வீரரான வருண் சிங் பாட்டி 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் இந்திய அணி 2 பதக்கத்தைப் பெற்றது.

ஈட்டி எறிதல்:

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்46 பிரிவில் பங்கேற்ற தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஜஜாரியா, 62.15 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்து தங்கத்தைக் கைப்பற்றினார். 12 வருடங்கள் கழித்து 2016 ரியோ பாராலிம்பிக்கில் பங்கேற்ற தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்து தன்னுடைய முன்னாள் ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.

குண்டு எறிதலில்:

பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் தீபா மாலிக் பங்கேற்றார். இறுதிப் போட்டியில் பக்ரைன், கிரீஸ் மற்றும் இந்திய வீராங்கனைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.இதில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் 4.61 மீ்ட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபா மாலிக் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் சாதனைகள்

மல்யுத்தம்:

சாக்ஷிமாலிக் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப்பிரிவின் ‛ப்ரீ ஸ்டைல்’ பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமை சாக்‌ஷி வசமானது. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பாட்மிண்டன்;

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனி நபர் பாட்மிண்டன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதிய ஆட்டத்தில் போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும் அவர் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சிந்து ஆவார். மேலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் 5-வது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஜிம்னாஸ்டிக்:

மகளிர் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நான்காவது இடம் பெற்றார். இதன் மூலம், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நூலிழையில் கை நழுவிப் போனது. ஆனாலும் இவர் உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். “புராடுநோவா” என்னும் ஆபத்தான முறையை இவர் தேர்வு செய்ததே அதற்கு காரணம். அந்தரத்தில் இரண்டு குட்டிக்கரணங்கள் போட்டு கால்பதிக்கும் இந்த முறையை உலக அளவில் இதுவரை வெற்றிகரமாக விளையாடி முடித்த ஐந்து பெண்களில் இவரும் ஒருவர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close