[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்.. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

india-vs-england-fourth-test-cricket

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 2-ஆவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடர்ந்தது. நிதானமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 31 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வோக்ஸ் 11 ரன்களிலும், ரசித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார். அவர் 76 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close