[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

கோலியின் ஆலோசனைகளைக் கேட்கும் தோனி

using-kohli-s-brain-more-now-dhoni

டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோலியின் ஆலோசனைகளை அதிகளவில் கேட்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஹிமாச்சலப்பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முன்னதாக இவ்விரு அணிகள் இடையே நடந்த டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளதால், இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் தோனி, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆட்டநுணுக்கங்களும் மாறிவருவதாகக் குறிப்பிட்டார். போட்டியின்போது விராத் கோலியின் ஆலோசனைகளை அதிகளவில் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்த தோனி, இது போட்டியை வேறுவிதத்தில் அணுக உதவும் என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close