[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

நியூசிலாந்து தொடரை வென்ற இந்திய அணி: சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம்

eden-gardens-test-india-beat-nz-by-178-runs

நியூசிலாந்து அணிகெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 316 ரன்களும், நியூசிலாந்து அணி 204 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 263 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு 376 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சைச் சமாளிக்கமுடியாமல் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் லாதம் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 81.1 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அனி 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரை வென்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்தது. இந்தியாவில் நடந்த போட்டிகளில், ஒரே போட்டியில் அதிக எல்.பி.டபிள்யூ முறை மூலம் விக்கெட்டுகள் வீழ்ந்த போட்டி என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் எல்.பி.டபிள்யூ முறையில் 15 வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close