[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

அவன் கூப்டா உன்னய யாரு நம்பி போகச்சொன்னது ? பெண்களை சூழும் அபத்தமான கேள்வி

attention-to-social-media-users

ஏதோ சாலையில் போய்க்கொண்டிருக்கையில் அவன் கூப்டது போலவும் அந்த பெண் அவனுடன் சென்றுவிட்டது போலவும் சொல்லப்படும் ''அவன் கூப்டா உன்னய யாரு போகச்சொன்னது?'' என்ற கேள்வி உண்மையில் வேதனை. 'உன்னய நம்பி தானே வந்தேன்' என்று அந்தப்பெண் கூறும் வார்த்தையில் அனைத்துமே அடங்கிப்போகிறது. திட்டமிட்டு காய் நகர்த்தும் அந்த கும்பலின் முதல் ஆயுதமே நம்பிக்கையாகவே இருந்திருக்கிறது. அவன் எத்தனை உறுதியான நம்பிக்கையை கொடுத்திருந்தால் அந்த பெண் அவனுடன் தனியாக வந்திருப்பாள். இதில் எத்தனை மாத நம்பிக்கை விளைந்திருக்குமோ? எத்தனை எத்தனை காய் நகர்த்தல்கள் நடந்திருக்குமோ?

பெண்களுக்கு நம்பிக்கையான ஒருவர் யார் என்று சொல்லுங்கள்? தோழனா? காதலனா? கணவனா? அப்பாவா? இந்த உறவு முறைகளில் உள்ளவர்களே பெண்களை சீரழித்த கதையை நீங்கள் டிவிகளில் பார்க்கவில்லையா? பிறகு யாரைத்தான் நம்புவது.

காலையில் கோயம்பேடு வந்து ஏதோ ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்லும் அவளின் நம்பிக்கை. இரவு வேலை முடிந்து யாரென்றே தெரியாத ஓலா கேபில் ஏறிச்செல்லும் அவளின் நம்பிக்கை, யாருமில்லா ரயில் பெட்டியில் ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தாலும் உள்ளே சென்று அமரும் அவளின் நம்பிக்கை, யாருமில்லா சாலையில் தூரத்தில் ஒருவன் மட்டும் சாலையில் நின்றிருந்தாலும் அவனை கடந்து செல்லும் அவளின் நம்பிக்கை. எல்லாம் நம்பிக்கை.

உன்னைய யாரு நம்பி போகச்சொன்னது என்று கேள்வி கேட்பது எத்தனை விசித்திரமானது. நம்பவில்லை என்றால் அதிகாலையில் படுக்கையை விட்டுக் கூட எழாமல் பெண் வீட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் வீட்டில் உள்ளவர்கள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே. இதில் அந்த பெண்களின் நம்பிக்கை மட்டுமல்ல. ஊரில் இருந்து பெண்ணை சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டு கிராமத்தில் தூங்கிக்கொண்டு இருக்கும் அப்பாவின் நம்பிக்கை, அண்ணனின் நம்பிக்கை, ஒரு தோழனின் நம்பிக்கை, மகனின் நம்பிக்கை, கணவனின் நம்பிக்கை. அவள் பத்திரமாக இருப்பாள் என்ற நம்பிக்கை. அவளைச் சுற்றி யாராவது ஒரு பெண்ணின் அப்பாவும், அண்ணனும் தானே இருப்பான் என்ற நம்பிக்கை.

பெண் குழந்தையை பார்த்தால் கூட வாரி அணைத்து முத்தமிடமுடியாத சூழ்நிலைக்கு இன்று ஆண்கள் தள்ளப்பட்டு இருப்பது ஆண்களின் தவறேயன்றி வேறு ஒன்றுமில்லை. ஒரு ஆண் மட்டும் தனியே நிற்கையில் அங்கு ஒரு பெண் நிற்க பயம் கொள்வது எத்தனை வேதனையானது அந்த ஆணுக்கு. உங்களின் சந்தேக உணர்வு உங்களின் பாதுகாப்புக்கு முதல் படி என்றால் சந்தேகம் கொள்ளுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து சந்தேகம் கொள்ளுங்கள். பாதுகாப்பின் முதல் படியே சந்தேகம் தான்.

சமூக வலைதள பெண்களுக்கு, ஆண்களுக்கு:

சமூக வலைதளங்களில் உங்கள் உறவினர்கள், அலுவலக, கல்லூரி, பள்ளி நண்பர்கள், முகம் அறிந்த நண்பர்கள் இவர்களைத் தாண்டி, நீங்கள் பார்க்கும் ஆணோ பெண்ணோ யாருமே உண்மையானவர்களா என்று சந்தேகம் கொள்ளுங்கள். லைக், கமெண்டை தாண்டிய நெருக்கத்தை அனுமதிக்காதீர்கள். என்றுமே நம் பின்னால் ஒருவர் பாதுகாத்து நிற்க முடியாது. நம்மை நாம் தான் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒழுக்கம் என்பது, இதை பார்க்க யாருமே இல்லை என்ற எல்லை வரை மட்டுமில்லை. வாய்ப்பு கிடைக்கும் வரை மட்டுமில்லை. அது நம் மனதோடு பின்னியிருக்க வேண்டும். நமக்கு ஒரு எல்லை வேண்டும். இந்த உலகமே ஒன்று திரண்டு நம் எல்லையை கடக்கச் சொன்னாலும், நாம் நம் எல்லைக்குள் தான் இருக்க வேண்டும். ஒழுக்கவாதியாக.
இது அனைவருக்குமே பொருந்தும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close