[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு ஏன் ?

why-opposition-of-art-of-living-event-at-tn-heritage-temple

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பு சார்பில் நடைபெறவுள்ள ஆன்மிக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பல அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு என்று பார்த்தால் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியது இருக்கிறது.

ஆம், உலக கலாசார விழா என்ற பெயரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, யமுனை நதிக்கரையில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் 13 வரை ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக, யமுனை நதிக்கரையின் நீர்பரப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. விவசாயிகளின் விளைநிலங்களும் அபகரிக்கப்பட்டன.

Image result for வாழும் கலை 2016

அப்பகுதியில் நிறைந்திருந்த மரங்கள், காடுகள் முழுவதும் அழிக்கப்பட்டன. இந்த விழாவால் நதிக்கரை பாழ்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரும் சர்ச்சை எழுந்ததை அடுத்து நதிக்கரை சேதத்தை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. கலாசாரத் திருவிழாவால் சேதமடைந்த யமுனை நதிச் சமவெளியை சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்.

என்பதோடு ரூ.42 கோடி செலவாகும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் நிபுணர்கள் குழு தெரிவித்தது. சஷி சேகர் என்கிற நீராதார அமைச்சகச் செயலர் தலைமை வகித்த நிபுணர்கள் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. கலாசார திருவிழா நடத்தப்பட்ட யமுனை நதியின் 120 ஹெக்டேர்கள் (சுமார் 300 ஏக்கர்கள்) மேற்கு வலது புறக்கரைப்பகுதி மற்றும் 50 ஹெக்டேர்கள் இடதுக்கரை சமவெளியும் சுற்றுப்புற சூழல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது என்று 47 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Image result for வாழும் கலை 2016

ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே யமுனை நதியை சேதப்படுத்தி, வாழும் கலை அமைப்பின் உலகக் கலாச்சார நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறி, அந்த அமைப்பிற்கு ரூ 5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் " நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எந்த மரத்தையும் வெட்டவில்லை.  இந்த நிகழ்ச்சியில் லட்சக் கணக்கான மக்கள்  கலந்து கொள்கிறார்கள். பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள அபராதம் ரூ. 5 கோடியை செலுத்த முடியாது. அதற்குப் பதிலாக சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளோம். அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டும் அபராதம் விதிக்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது" என்று காட்டமாக தெரிவித்தார்.

இப்போது தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில் இரண்டு நாள் தியான நிகழ்ச்சி இன்று மாலை தொடங்குகிறது. இதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தல் போடப்பட்டுள்ளது. கோயிலின் உள் பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், பந்தல் அமைக்கப்பட்டதற்கும் சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் கோயிலை ஒட்டி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது போன்ற படங்கள் பகிரப்பட்டு வருகிறது. 

அனைத்துவிதமான அனுமதியையும் பெற்றுள்ளதாக வாழுமை கலை அமைப்பின் தமிழக ஊடக ஒருங்கிணைப்பாளர் ராஜி சுவாமிநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நிகழ்ச்சி நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே நாங்கள் அனுமதி பெற்றுவிட்டோம். இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது, நிரந்தரமான எந்தப் பந்தலும் போடக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளை மட்டும் சொன்னார்கள். இது தியானம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. இதில் கூச்சல் ஏற்பட வாய்ப்பே இல்லை. இசை நிகழ்ச்சியும் கிடையாது. கடந்த காலங்களிலும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆனாலும், யமுனை நதிக்கரை போன்று ஒரு நிலை ராஜராஜ சோழன் கட்டிய, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலும் பாழாகிடுமோ என்ற அச்சம்தான் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.    

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close