[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

'மீம்' தயாரிப்பாளர்களே! பள்ளிக் குழந்தைகளை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காதீர்கள்!

gaja-storm-memes-gaja-storm-cross-cuddalore

எல்லாச் செய்திகளையும் கேலியும் கிண்டலுமாக அணுகும் மனநிலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு காரணம் மீம் போடுபவர்கள்தான். மீம் போடுபவர்கள் பலர் புரிதல் இல்லாமல் தாங்கள் போடும் மீம்களால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை. குறிப்பாக வானிலை தொடர்பான செய்திகள் வரும் போது பள்ளிக் குழந்தைகளை மையமாக கொண்டு மீம்கள் தயாரிக்கப்படுகிறது.  குற்றமே செய்யாத பள்ளிக் குழந்தைகளை குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறார்கள். வானிலை அறிக்கை வெளியான உடன் அதன் தாக்கத்தைப் பொருத்து பள்ளி, கல்லூரிகள் விடுமுறைகளை அறிவிப்பார்கள், சில சமயங்களில் அலுவலகங்கள் கூட விடுமுறை அளித்திருக்கிறது. 

வானிலை அறிவிப்பின் தீவிரத்தை உணர்ந்து அளிக்கப்படும் விடுமுறை என்பது எவ்விதப் பாதிப்பும் இன்றி அனைவரும் நலமுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காக தான். மழை காலத்தில் பள்ளிக் குழந்தைகளை விட பெற்றோர்களே பள்ளி விடுமுறையை எதிர்பார்த்து இருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு ஒரு விதமான அச்ச உணர்வால் ஏற்படுகின்ற எதிர்பார்ப்பு. பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வால் தோன்றும் எதிர்பார்ப்பு.

குழந்தைகளுக்கு விடுமுறைக்கான நோக்கம் பெரிதும் புரியாவிட்டாலும், மழையின் காரணமாக ஏதோ இடையூறு இருக்கும் என்ற குறைந்தப்பட்ச புரிதல்களோடுதான் அவர்கள் மற்ற நிகழ்வுகளை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள். வானிலை அறிவிப்புகளின் வீரியத்தையும், தன்மைகளையும் புரிந்துக் கொள்ளாத மீம் தயாரிப்பாளர்கள், தங்களது எண்ண ஓட்டத்தை பள்ளிக் குழந்தைகளின் எண்ண ஓட்டமாக திரித்து குழந்தைகளிடம் மேம்போக்கான கருத்தை திணிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை அவர்களுக்கே தெரியாமல் குற்றவாளி ஆக்குகிறார்கள்! 

உண்மையில் 'மீம்' தயாரிப்பாளர்களும் இதை தெரிந்தேதான் செய்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலானோர் அப்படி இல்லை என்பதுதான் பதில். 'மீம்' தயாரிப்பாளர்கள் தங்களுக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாக  எண்ணி செய்யும் செயல். இணைய உளவியலின் படி தங்களை இந்த இணைய வெளியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும், தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்,  தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும் தான் இந்த வேலைகளை செய்கிறார்கள்.

'மீம்' தயாரிப்பாளர்கள் செய்திகளின் தன்மைகள் அறிந்தும், தெளிவாகப் புரிந்துக் கொண்டும் தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர அவர்களையும் குற்றப்படுத்துவதற்காக அல்ல!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close