[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

குற்றவாளிகளை கண்டுபிடித்தது எப்படி? - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் 

shocking-information-in-train-robbery-on-salem

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவது போல் சேலம் சென்னை ரயில் கொள்ளை வழக்கில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் விருதாச்சலம் அருகில் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளை நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கினை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகளை கண்டுபிடித்தது எப்படி?

சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து கொள்ளை சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்தும், அதற்கென தகவலாளிகளை நிறுவியும் வந்தன. குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையானது பரந்து விரிவுபட்ட தொழில்நுட்ப ஆய்வினை மேற்கொண்டு சில முக்கிய தரவுகளை திரட்டியது. 

சேலம் மாநகர குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று, உஜ்ஜையின் மற்றும் குணா மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களை சந்தித்து உரையாடி மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்ற குழுக்களை குறித்து தகவல் அறிந்தனர். இடையறாத முயற்சிக்குப்பின் மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர்சிங் மற்றும் கூட்டாளிகளுக்கு இவ்வழக்கோடு தொடர்புள்ளது என்ற நம்பத்தகுந்த தகவலை காவல் துணை காணிப்பாளர் கிருஷ்ணன் திரட்டினார். நீண்ட ஆய்வுக்கு பின் மேற்கண்ட குழுவானது ரயில் கொள்ளையில் ஈடுபடுட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ரயில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் சென்னை வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, மத்திய பிரதேசம், ரட்லத்தைச் சேர்ந்த தினேஷ்(38), ரோஹன் பார்தி(29) ஆகிய இருவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, குற்றவாளிகள் தினேஷ் மற்றும் ரோஹன் இருவரும் மோஹர்சிங் தலைமையில் கீழ் இந்த கொள்ளை சம்பவத்தில் தாங்கள் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.  மேலும் விசாரணையில், கொள்ளை சம்பவத்தோடு தொடர்புடைய கொள்ளை கூட்ட தலைவன் மோஹர்சிங் மற்றும் கூட்டாளிகளில் சிலர் குணா மாவட்ட மத்திய சிறையில் மற்ற வழக்கு சம்மந்தமாக அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது.

கொள்ளை நடந்தது எப்படி - குற்றவாளிகள் வாக்குமூலம்

கொள்ளையர்கள் 5 பேர் 2016 ஆகஸ்ட் 8ம் தேதி இரவு சேலம் சென்னை ரயிலின் மேற்கூரையில் அமைர்ந்து சென்றுள்ளனர். ரயிலானது சின்னசேலத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மேற்கூரையின் மீது துளையிட்டு, அந்த துளையின் வழியே இறங்கியுள்ளனர். பின்னர், மரப்பெட்டிகளை உடைத்து பணக்கட்டுகளை எடுத்து அவற்றை லுங்கியில் சுற்றி வைத்து கொண்டனர். விருத்தாசலத்தில் இந்த கொள்ளையர்களுக்காக அவர்களது கூட்டாளிகள் காத்திருந்தனர். லுங்கியில் சுற்றப்பட்ட பணக்கட்டுகளை கூட்டாளிகளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அனைவரும் தப்பித்துவிட்டனர். 

தீரன் அதிகாரம் ஒன்று படம் போல் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோஹர்சிங் தலைமையிலான குழுவானது பார்தி குற்றவாளிகள் குழுவினைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொள்ளை குழுவினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் குழுவாக சென்று அப்பகுதிகளில் சாலையோரம் அல்லது ரயில் நிலையம், தண்டவாளங்கள் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து கொள்வர். இவர்கள் கட்டிட தொழிலாளிகளாகவும், பலூன் மற்றும் பொம்மை விற்பனையாளராகவும், வேலை செய்வது  போல் அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொள்ளையடிப்பதற்கு ஏதுவான இடத்தை தேர்ந்தெடுப்பார்கள். 

மேலும் இவர்கள், மத்திய பிரதேசம், ராஜ்ஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களோடு தொடர்புடையவர்கள். தமிழ்நாட்டில் இக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மற்ற குற்றங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close