[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட காவலர்: வைரலாகும் வீடியோ 

kochi-home-guard-caught-on-camera-inappropriately-touching-women-and-girls

போலீஸ் உடையில் ஒரு காவலர் செய்த தகாத காரியம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாலையில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கிறார். அந்த வழியே அவரை கடந்து பலர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வரும் அவர் மக்களை காப்பதற்காக மிக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வேலையை கவனித்து கொண்டு சென்று வருகிறார்கள். ஆனால் அவர் காவல்காக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்துக் கொண்டிருக்கிறது என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அப்படி என்னதான் செய்தார் இந்தக் காவலர்?

சாலை ஓரமாக அவர் நிற்கிறார். அப்படி நின்று கொண்டிருக்கும் போது அவரை கடந்து சில பெண்கள் செல்கிறார்கள். அப்படி அவர் அருகில் பெண்கள் கடக்கும் போது அவரது கையால் அவர்களின் பின்பக்கத்தை தட்டுகிறார். அதுவும் ஏதோ எதேட்சையாக நடப்பதை போல அவர் அதை செய்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் பள்ளி சீருடையில் பெண் பிள்ளைகள் காலை வேலையில் பள்ளிக்குச் செல்கிறார்கள். மிக வேகவேகமாக சாலையைக் கடக்கும் அந்தப் பிள்ளைகள் அவரது அருகில் வரும்போது அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர்களின் பின்புறத்தை உரசுகிறார் இந்தக் காவலர். அந்த மாணவிகளின் சிலர் இதை தற்செயலாக எடுத்து கொண்டு கவனிக்காமல் கடந்துவிடுகின்றனர். ஆனால் அதில் ஒருசில மாணவிகள் அவர் தட்டுவதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதை உணர்ந்து திரும்பி அவரை பார்க்கிறார்கள். அவர் யாரையும் கவனிக்காததை போல திரும்பி நின்று கொள்கிறார். இந்த அநியாயம் எல்லாம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது தெரியுமா? 

எல்லாம் சிசிடிவி செய்த காரியம்தான். தான் என்ன செய்கிறோம் என்பதை கொஞ்சமும் யோசிக்காமல் செய்த காவலருக்கு பின்னால் ஒரு கடையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி இந்தக் காட்சிகளை அப்படியே பதிவு செய்துவிட்டது. அந்தக் கடைக்காரரின் மூலமாக இந்தக் காட்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 

இவர் ஒரு ட்ராஃபிக் போலீஸ் என்பதும் இவரது பெயர், சிவக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. 56 வயதான இவர்தான் இந்தக் கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கொச்சியிலுள்ள எலம்காரா பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தேவரா பகுதியிலுள்ள லூர்து மாதா சர்ச் முன்பாகதான் இவர் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போதுதான் இதைபோல் அவர் நடந்து கொண்டுள்ளார். போகும் வரும் பெண்களை, பள்ளி மாணவிகளை அவர் மிக அறுவறுப்பாக தடவும் காட்சிகளைக் கண்ட கேரள மக்கள் சமூக வலைத்தளத்தில் இக்காட்சிகளை மிக வேகமாக பரப்பி வருகிறார்கள்.

இந்த வீடியோ வெளியான உடனேயே இவரை பணியில் இருந்து இடைநீக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டும் உள்ளது.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close