[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.97 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை

எங்கிருந்து இறக்குமதி ஆனது பிக்பாஸ் ? 

where-the-bigboss-is-come-from

கடந்த சில நாட்களாக நம்மை அறியாமல் கைகள் ரிமோட்டை தேடிச் செல்லும், சேனலை மாற்றி வைத்துவிட்டு சோபாவில் ஒன்றரை மணி நேரத்துக்கு பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல அமர்ந்து கிடக்கிறோம். எதற்க்கு ? ஏன் ? வாருங்கள் பார்க்கலாம்......

பல்வேறு சர்ச்சைகளுக்கிடையேயும் எதிர்ப்புகளுக்கிடையேயும் நடந்து முடிந்தது ஒரு நிகழ்ச்சியின் முதல் பாகம், தற்போது அதே நிகழ்ச்சியின் 2ஆம் பாகம்  தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் நம்மில் அனைவருக்கும் தொற்றிக்கொள்ளும் ஒரு பரபரப்பு. தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இந்த பேச்சு தான்  “பிக்பாஸ்”

ஏதோ நிகழ்ச்சி ஒன்று உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார், என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே ?  என்று நம்பில் பலர் ஆர்வ மிகுதியில் இருக்கிறோம். நீங்கள் தொலைக்காட்சி முன்பு உட்காரும் அந்த ஒன்றரை மணி நேரத்தில் முதலாளிகள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? கணக்குப் போட்டால் தலை சுற்றி கீழே விழுவீர்கள்....!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வேர் குறித்து ஆராய்வோமானால் நெதர்லாந்தில் உள்ள ‘எண்டமோல்’ என்ற நிறுவனத்தால் 1990-ல் முதன் முதலாக ‘பிக்பிரதர்’ என்னும் பெயரில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இது தான் தற்போது “பிக்பாஸ்”.  54 நாடுகளில் 350-க்கும் அதிகமான சீசன்களை இது நிறைவு செய்துள்ளது. இந்தியாவில் 2006-ம் ஆண்டு  “பிக்பாஸ்” நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுவரை 10 சீசன்களை கடந்து 11-வது முறையாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தமிழில் 2017-ம் ஆண்டு தனது முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இது மாபெரும் ஹிட் அடித்தது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆரவ் ஓவியா காதல், ஓவியாவிற்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம், பாடலாசிரியர் சிநேகனின் கட்டிப்பிடி வைத்தியம், ஜூலியின் சந்தர்ப்பவாத சில்மிஷங்கள், காயத்ரியின் பேச்சு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இறுதியில் ஒவியாவிற்காக ரசிகர்களின் ஆர்மியே தொடங்கப்பட்டது. இறுதியில் வெற்றியாளர் மருத்துவ முத்தம் நாயகன் ஆரவ் தான்.

இந்நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி முதல்  “பிக்பாஸ்” - 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மும்தாஜ், யாஷிகா ஆனந்த், ஜனனி உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் அண்மையில் குடும்பப் பிரச்னைகளுக்காக மீடியாவில் பெரிதும் பேசப்பட்ட தம்பதிகளான பாலாஜி மற்றும் நித்யாவும் அடங்கியுள்ளனர். நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் கவர்ச்சிக்காகவும், வியாபார ரீதியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிலர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மேலும் பெரும்பாலானோர் நடிகர் கமல்ஹாசனுக்கு வேண்டிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

நெதர்லாந்தில் தொடங்கிய பிக்பாஸ் இந்தியாவிலும் சக்சஸ் அடிக்க, இப்போது தமிழகத்தில் சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close