[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

”ஒரு நேரத்துல ஊரே ஒயர் கூடை பின்னும்” திரும்பி பார்ப்போம்

we-do-not-know-ourselves-in-our-daily-needs-plastic

காய்கறிகள் முதல் கசாப்பு கடையில் கறி வாங்குவது வரை எல்லாம்  பிளாஸ்டிக்தான்.  பல பேர் குப்பை கூடைக்கு குட் பை சொல்லிவிட்டு பிளாஸ்டிக் பையைதான் பயன்படுத்துகிறார்கள். அப்படியா? என்று கேட்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ சாலையோரமாகவோ… தெருவோரமாகவோ… பொங்கி வழிந்து கொண்டிருக்கும் மாநகராட்சி குப்பை தொட்டியில் தூரத்திலிருந்து குப்பைகள் நிறைந்த பிளாஸ்டிக் பையை வீசியவர்களில் நீங்களும் ஒருவராக இருந்திருக்கலாம்.

இது மட்டுமா? துணி கடையில் நாம் வாங்கும் புத்தம் புது ஆடைகளை கடையின் பெயர் போட்டு பளிச்சென்று அச்சடித்திருக்கும் பிளாஸ்டிக் பைகளில் வாங்கி கொண்டு வருவதும்.. சில நேரங்களில்  “இன்னும் ரெண்டு பிளாஸ்டிக் பை தாருங்கள்” என்று தாராள மனதுடன் கேட்டு வாங்கி வருவதும் நாம்தான். தபால் தலைகளை சேகரித்து வைப்பது போல இந்த பிளாஸ்டிக்  பைகளை சேர்த்து வைத்து கொண்டு ஊருக்கு செல்லும் தருவாயில், அதில் துணிகளை வைத்து பக்காவாக பேக்கிங் செய்து கொள்வதும் நம்மில் பலருக்கு பழக்கமிருக்கலாம். 

பிளாஸ்டிக்கை இன்னும் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பைதை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது. ஒரு வேளை குப்பை தொட்டிளுக்கு பேச்சு வந்தால் அது சொல்லும் கதை கதையாய்! அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நோ சொல்லியிருக்கிறது தமிழக அரசு. இனி காய்கறி வாங்கும் போது கைவீசம்மா கைவீசு என்று போக முடியாது. வீட்டில் இருந்து ஒரு கூடையோ அல்லது  வேறு  பையோ எடுத்துச் செல்ல வேண்டும். கடையில் அரை கிலோ ஜீனி வாங்கினால் கூட பேப்பரில் சுருள் போட்டு தரும் முறை மாறி ஒரு பாலித்தின் கவரில் நிரப்பி கொடுக்கும் வழக்கத்திற்கு நம் ஊர் அண்ணாச்சிகள் பலரும் பழக்கப்பட்டுவிட்டார்கள்.

பேப்பரில் சுருள் போட்டு அதை சணலில் கட்டி பொருள் சிந்தாமல் சிதறாமல்  தருவது அண்ணாச்சிகளுக்கு கைவந்த கலை. இதையெல்லாம் மாற்றியது பாலீத்தின் பைகள். பூ வாங்கும் போது அதன் அழகே பூவை சுற்றியிருக்கும் இலைகள்தான். இப்போது  அந்த இலைகளே இல்லாமல் இடுப்பில் தொங்க கூடிய பாலீத்தின் பையை எடுத்து அதில் பூவை வைத்து விற்பனை செய்ய பழகிவிட்டார்கள்  நம் பூக்காரம்மாக்கள். அது போலவே தான் ஒயர் கூடைகளும் இதுவும் பிளாஸ்டிக்தான் என்றாலும் கூட use and throw கிடையாது வீதியில் சட்னெ வீசுவதற்கு …

ஒயர் கூடைகளை இப்போதும் பயன்படுத்தும் குடும்பங்களும் இருக்கிறார்கள். ஆனால் எந்த அளவு என்பதுதான் கேள்வி. ஒரு காலத்தில் பெண்கள் பல பேர் இதில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். கூடையின் அடி போடுவது ஒருத்தர், அதன் பிடி போடுவது ஒருத்தர் என பெண்கள் சிலர் கூட்டாக செய்யும் வேலைகளை  நாம் பார்த்திருப்போம். நெல்லிக்காய் கூடை, பிஸ்கட் கூடை,  சிவன்கண் கூடை  என வகைவகையான கூடைகள் பல வண்ணங்களில் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
 
பொதுவாக இத்தகைய கூடைகளை கிராமங்களில் யாரும் கடைகளில் வாங்க மாட்டார்கள். ஏனெனில் பெரும்பாலும் அவர்கள் வீட்டு பெண்களே இதை செய்வதால் கடைகளுக்கு ஏன்  போவானேன்?! அதிக பயன்பாட்டால் அழுக்குப் பிடித்து காணப்படும் கூடைகளை என்றோ ஒருநாள் சோப்பு போட்டு கழுவி அது காய்ந்த பிறகு மீண்டும் புத்தம் புது கூடையாய் ஜொலித்திடும் அந்த கூடையின் அழகே தனிதான். 

பூஜை அறையில் அர்ச்சனை கூடையாகவும், சமயலறையில் காய்கறி கூடையாகவும், பள்ளி குழந்தைகளுக்கும் வேலைக்கு செல்வோருக்கும் சாப்பாட்டுக் கூடையாகவும் பல விதங்களில் நாம் பயன்படுத்தி வந்த இந்தக் கூடைகளை தெரிந்தோ தெரியாமலோ நாம் மறந்து விட்டோம். கூடைகள் பின்னுவதில் கைதேர்ந்த பெண்களில் பலர்  இன்று அதன் பின்னல் முறையை  மறந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு அதன் பயன்பாடு அரிதாகிவிட்டது. இப்படி பிளாஸ்டிக் பற்றி பேசும் போது சுருள் பேப்பர்களும், ஒயர் கூடைகளும், தாமரை இலைகளும் நம் ஞாபகத்துக்கு வருவது போல நாம் மறந்து போன எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை அடுத்த பகுதியில் ஞாபகப்படுத்தலாம்.

ஞாபகம் வருதே தொடரும்… 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close