[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ஐ.பி.எல். சியர் லீடர்கள்: உற்சாகத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் சோகம் !

there-seems-to-be-lot-of-hardship-behind-cheer-leaders-in-ipl

2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகமானது. விளையாட்டு அணிகளை தனித்தனியாக பிரித்து, வீரர்களை ஏலம் எடுப்பது போன்ற முறைகள் 10 வருஷத்துக்கு முன்பு வரை எல்லாமே புதுசு. அதுவும் ஒவ்வொரு முக்கிய நகரங்களின் பெயர்களில் அணிகள், என உற்சாகமாகவே தொடங்கியது ஐ.பி.எல். போட்டிகள். இந்திய ரசிகர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் ஒரு கவர்ச்சி தேவைப்படுகிறது. அது சினிமாவாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி.

கிரிக்கெட் ரசிகனுக்கு போட்டியை தாண்டி புதிதாக ஒரு விஷயத்தை கொண்டு வந்தனர் ஐ.பி.எல். நிர்வாகிகள். அதுதான் "சியர் லீடர்ஸ்" என்கின்ற உற்சாக அழகிகள். இதனை இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர், ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி. சியர் லீடர்ஸ் குட்டை பாவாடை அணிந்து, அணிகள் பவுண்டரிகள், சிக்ஸர்கள், விக்கெட்டுகள் எடுக்கும்போது நலினமான, அதிரடியான டான்ஸ் மூமெண்ட்டுகள் கொடுக்கும் பொழுதுபோக்குகாரர்கள். இவர்கள் ஆடுவதற்கென மைதானங்களில் பிரத்யேகமான மேடை அமைக்கப்பட்டிருக்கும்.

இத்தனை கவர்ச்சியான ஆட்டத்தை கிரிக்கெட்டுக்கு நடுவே நேரிலோ அல்லது டிவியில் பார்க்கும் இந்தியக் கிரிக்கெட் ரசிகன், காணாததை கண்டது போல உற்சாகம் அடைந்தான். முதலில் விளையாட்டு போட்டிகளுக்கு நடுவே மைதானத்தில் இது தேவையா என்ற கருத்து நிலவியது. பின்பு ஐ.பி.எல். போலவே சியர் லீடர்ஸும் பழகிப்போனார்கள். இப்போதெல்லாம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூட ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தினர், மண்டபங்களின் வாசலில் நிற்க வைப்பதற்கு பெண்களை வேலையில் அமர்த்துகிறார்கள்.

அவர்கள் அப்படி அழகு பதுமையாக நின்று வரவேற்பதற்கு என குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வழங்குகிறார்கள். அதுபோலதான், சியர் லீடர்ஸூம். கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்தும் இவர்களை ஒப்பந்தக் கூலியாகத்தான் நியமிக்கப்படுகிறார்கள். இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் சியர் லீடர்ஸ் அனுபவிக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை கூட வெளியே சொல்ல முடியாது. அப்படி சொன்னால் சியல் லீடர்ஸின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

ஐ.பி.எல். அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவிர, மற்ற அணிகள் அனைத்தும் சியர் லீடர்ஸ் பெண்களை வெளிநாட்டில் இருந்தே அழைத்து வருகிறார்கள். குறைவான ஆடை, எப்போதும் சிரிப்பு, அதிரிபுதிரியான நடன அசைவுகள், இவைதான் சியர் லீடர்ஸ் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள். இவர்களின் ஆட்டத்தை டிவியில் பார்க்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் ரசிப்பார்கள். ஆனால், உண்மையில் சியல் லீடர்ஸ் ஏராளமான பிரச்சனைகளும், பாலியல் சீண்டல்களுக்கும் நடுவில்தான் தங்களது ஒவ்வொரு ஆண்டின் ஐ.பி.எல்.களையும் கடக்கின்றனர்.

ஐ.பி.எல். மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சியர் லீடர்ஸ் பங்கேற்கின்றனர். எனவே, இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் சியர் லீடர்ஸ்க்கு பாலியல் சீண்டல்கள் இருக்கிறது. அதுமல்லாமல். ஒரு சில சியர் லீடர்ஸ் குழுவுக்கு ரொம்பவும் சுமாரான ஹோட்டல் அறைகளும், உணவுகளும் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. முதல் நான்கு சீசன் ஐ.பி.எல்.களில் சியர் லீடர்ஸ் ஆடைகள் படுகவர்ச்சி, ஆனால் இப்போது அது குறைந்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எது மாதிரியான பாலியல் சீண்டல்கள் ?

கிரிக்கெட் ரசிகர்கள் சியர் லீடர்களை தொட்டு பார்க்க நினைக்கிறார்கள் அதற்காக முட்டி மோதுகிறார்கள். மேலும் அவர்கள் அமர்ந்திருக்கும் பின்னால் இருக்கும் கேலரியில் இருந்து ரசிகர்கள் அடிக்கும் கமணட்டுகளை காது கொடுத்து கேட்கவும் முடியாது, எழுதவும் முடியாது என முகநூலில் தொடர்புக்கொண்ட லண்டனைச் சேர்ந்த பெண் சியர் லீடர் ஒருவர் தெரிவித்தார். ஆனாலும், இதையெல்லாம் தாண்டி முகத்தை மலர்ச்சியுடனும், புன்னகையுடன் எப்போதும் சியர் லீடர்கள் இருக்க வேண்டும். மேலும், சியர் லீடர் அணிகளுக்குள்ளே பாகுபாடுகள் இருக்கிறது. சியல் லீடர்களாக இருக்கும் இந்தியப் பெண்களுக்கு கவர்ச்சி உடை கொடுப்பதில்லை.

ஆனால் வெளிநாட்டு பெண்களுக்கும் மட்டும் கவர்ச்சியான ஆடை வழங்கப்படுவதாகவும் இவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். மேலும் சில முக்கிய நபர்களே சியர் லீடர்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கமும் உள்ளதாக கவலையுடன் தெரிவித்தார் அந்த சியர் லீடர். ஒரு மாதம் ஐ.பி.எல். எனும் கிரிக்கெட் திருவிழா நடந்து முடிவதற்குள் உளவியல் ரீதியான அனைத்துப் பிரச்சனைகளையும் சியர் லீடர்ஸ் எதிர்கொள்வார்கள். இத்தனை துனபங்களையும் கடந்து சியர் லீடர்ஸ் சிரிக்கிறார்கள், ஆடுகிறார்கள் என்றால் அது நம்முடைய கிரிக்கெட் ரசிகனுக்காக மட்டுமே என மைதானத்துக்குள் செல்லும் பார்வையாளர்கள் உணர வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close