[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

ஐ.பி.எல்: அதிக 'கேட்ச்' பிடித்த பீல்டர் யார் ?

which-player-hold-most-number-of-catches-in-history-of-ipl

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளன. இந்தக் கோடைக்கு சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் ஒரே பொழுதுப்போக்கு டி.வி.யில் ஐ.பி.எல். போட்டிகளை கண்டு ரசிப்பது மட்டுமே. கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் எவ்வளவு முக்கியமோ, பவுலிங் எவ்வளவு முக்கியமோ அதேபோல பீல்டிங் மிக முக்கியமாக பார்க்கப்படும். ஒரு பவுலர் சிறந்தப் பந்தை வீசி, அதை பேட்ஸ்மேன் தூக்கி அடிக்க அதனை "கேட்ச்" பிடித்து அவுட் ஆக்க நல்ல பீல்டர்கள் தேவை. ஆங்கிலத்தில் "Catches win Matches" என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு பீல்டிங் மிக முக்கியமானது. உலகிலேயே தலைச்சிறந்த பீல்டர் யார் என்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமக்கு சற்றென்று தோன்றும் பெயர் தென் ஆப்பிரிக்காவின் ஜான்ட்டி ரோட்ஸ். ஆனால், இப்போதெல்லாம் ஒவ்வொரு அணியிலும் ஒரு ஜான்ட்டி ரோட்ஸ் இருக்கவே செய்கிறார்கள். 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 போட்டிகளில் சிறந்த ஐந்து பீல்டர்களை பார்க்கலாம்.

கெய்ரன் பொல்லார்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்டு, தனது அதிரடி பேட்டிங்க்கு பெயர் பெற்றவர். அதேபோல பவுலிங்கிலும் வல்லவர். 7 அடி
உயரமுள்ள பொல்லார்டு இருக்கும் திசைக்கு பந்துச் சென்றாலே, பேட்ஸ்மென்களுக்கு "திக் திக்" என இருக்கும். பந்து எவ்வளவு உயரம்
சென்றாலும் அதனை லாவகமாக பிடிக்கும் திறன் கொண்டவர் பொல்லார்டு. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் பொல்லார்டு
106 போட்டிகளில் 55 கேட்ச்களை பிடித்து அசத்தியுள்ளார்.

பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ, ஐ.பி.எல்.லில் இதுவரை இரண்டு முறை அதிக விக்கெட்டுகளை
எடுத்ததற்காக பர்பல் கேப் வாங்கியவர். அதிரடி பேட்டிங், அசரடிக்கும் பவுலிங் என பிரமாதப்படுத்தும் பிராவோ. பீல்டிங்கில் செம்ம கில்லி.
பவுண்டரியின் எல்லைக்கோட்டில் பிராவோ நின்றால், அவரை மீறி மேலே செல்லும் பந்தைக் கூட தாவி பிடித்து பேட்ஸ்மேனை அவுட்
ஆக்கும் திறமை கொண்டவர். இதுவரை 106 போட்டிகளில் 60 கேட்ச்களை பிடித்துள்ளார் 33 வயதாகும் பிராவோ.

ரோகித் சர்மா

ரசிகர்களால் "ஹிட் மேன்" என அழைக்கப்படும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ரோகித் சர்மா ஒரு
மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் ஒரு மிகச் சிறந்த பீல்டர். இந்திய அணியில் இருக்கும் மிகச்
சிறந்த பீல்டர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். இதுவரை 141 போட்டிகளில் 61 கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் ரோஹித் சர்மா.

ஏபி டி வில்லியர்ஸ்

கிரிக்கெட் மைதானத்தில் 360 டிகிரி திசையிலும் சுழன்று சுழன்று பந்தை அடிக்கும் தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் சூறாவளி ஏபி டி
வில்லியர்ஸ். பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காக விளையாடும் அவர் எதிர் அணியை பேட்டிங்கில் பிரித்து மேய்ந்தது ஏராளமாக
இருந்தாலும், கேட்ச் மூலம் பல எதிரணிகளின் வெற்றிகளை மாற்றி எழுதிய வரலாறும் உண்டு. இதுவரை 120 போட்டிகளில் 66
கேட்சகளை பிடித்துள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

சுரேஷ் ரெய்னா

10 ஆண்டுகள் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக கேட்சகளை பிடித்து அசத்தியவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணிக்கும் ரெய்னா, ரசிகர்களால் "சின்ன தல" என
அன்போடு அழைக்கப்படுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் வரிசையின் தூண், பீல்டிங்கில் அசகாயசூரண். இதுவரை 147
போட்டிகளில் 82 கேட்ச் பிடித்து பட்டைய கிளப்பியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close