[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஐ.பி.எல். டி20: பேட்ஸ்மேன்களை ஏமாற்றிய பந்துவீச்சாளர்கள் !

top-5-bowlers-those-dominated-batsmen-in-history-of-ipl

ஐபிஎல் போட்டிகள் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும். 20 ஓவர் போட்டிகளில் பவுலர்களை கிழித்து தொங்கவிடுவார்கள்
பேட்ஸ்மேன்கள். 20 ஓவர் போட்டிகளில் ஒரு பவுலர் அதிகப்பட்சம் 4 ஓவர் மட்டுமே வீச வேண்டும் என்பது விதி. பேட்ஸ்மேன்கள் பவுலர்களை பிரித்து மேய்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால், பேட்டிங்களில் எவ்வளவு பெரிய முரட்டுக்காளையாக இருந்தாலும், அவர்களை அடக்கும் சில பவுலர்கள் ஐ.பி.எல்.லில் இருக்கத்தான் செய்தார்கள், இன்றும் சிலர் இருக்கிறார்கள். டி20 போட்டிகளில் ஒரு பவுலர், ஒரு ஓவரில் சராசரியாக 7 ரன்கள் கொடுத்தால் சிறந்த பவுலர்களாக கருதப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் ஐ.பி.எல். வரலாற்றில் ரன்கள் வழங்கிய சராசரி விதத்தில் டாப் 5 பவுலர்களை பார்க்கலாம்.

முத்தையா முரளிதரன்

சர்வதேச கிரிக்கெட்டில் 1300 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழர்பந்தின் வித்தைக்காரன். சாதனை இலங்கைத் தமிழர் முத்தையா முரளிதரன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன் பின் ஒரு ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காகவும், அதன் பின் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். மொத்தம் 66 போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இறுதியாக 2014 ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்ற முரளிதரனின் சராசரி 6.67.

லசித் மலிங்கா

இலங்கையை சேர்ந்த லசித் மலிங்கா, வித்தியாசமான பவுலிங் ஸ்டைலுக்கு சொந்தக்காரர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் "ஸ்லிங் ஸ்டைல்" எனப்படும் பவுலிங்கை பின்பற்றும் வேகப்பந்து வீச்சாளர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் லசித் மலிங்கா ஒரு "யார்க்கர்" ஸ்பெஷலிஸ்ட். கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் சாதாரண பவுலர் அல்ல. கடைசி ஓவரை மலிங்கா வீசினால் ரன் அடிப்பது மிகவும் சிரமம். இதுவரை 143 விக்கெட்டுகளை மும்பை இந்தியன் அணிக்காக எடுத்துள்ள லசித் மலிங்காவின் சராசரி 6.67.

அனில் கும்பளே

இந்தியாவின் ஈடு இணையற்ற லெக் ஸ்பின்னர் அனில் கும்பளே. சரவ்தேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பவுலர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். ஐ.பி.எல்.லில் 42 போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அனில் கும்பளே. சர்வதேச போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு எப்படி சிம்மசொப்பனமாக இருந்தாரோ, அதேபோல ஐ.பி.எல் போட்டிகளிலும் பவுலிங் செய்தார் அனில். 2010-த்துடன் ஐ.பி.எல் போட்டிகளில் ஓய்வுப்பெற்ற அனில் கும்பளேவின் சராசரி 6.57.

ரவிசந்திரன் அஷ்வின்

இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத ஸ்பின்னர் அஷ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரம்பத்தில் இருந்து விளையாடி
வரும் அஷ்வின் ஐ.பி.எல.லில் தவிர்க்க முடியாத பவுலர். இந்தாண்டு ஐ.பி.எல்.லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 100 விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளார். "கேரம் பால்" ஸ்பெஷலிஸ்ட்டான ரவிசந்திரன் அஷ்வினின் சராசரி 6.55.

சுனில் நரேன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் இந்திய வம்சாவளி சுனில் நரேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தூண். சுழற்பந்து வீச்சு மன்னன். இவரின் பந்தை எதிர்கொள்வது சவாலானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை பெரிதும் நம்பி இருக்கிறது. எப்போதும், பவுலிங்களில் அசத்தும் சுனில் நரேன், கடந்தாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பேட்டிங்கிலும் தூள் கிளப்பினார். இதுவரை 95 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுனில் நரேனின் சராசரி 6.35.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close