[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்

சொல்லி அடி

solli-adi-a-special-article-for-youngsters

அண்ணே, பனிரெண்டாவது முடிக்கப்போறேன் கல்லூரியில் என்ன படித்தால் வேலைகிடைக்கும் என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்த படிப்பை சொல்லுங்க என்று பள்ளி மாணவன் தன் வீட்டு அருகில் இருக்கும் நண்பரிடம் கேட்க..

“தம்பி, நீ எதைப் படித்தாலும் வேலை கிடைக்காதுப்பா!” என்று எதிர்மறையாக பேசத்தொடங்கினார். 
இதுபோன்ற சில கதைகளை நேரில் பல இடங்களில் பார்க்கவும் நேரிடுகிறது. ஏன், இதுபோன்ற நிலைமைகளில் இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்கு யார் காரணம்? 
காரணங்களை கண்டுபிடித்து வெற்றியை “சொல்லிஅடி”ப்பதே இந்த கட்டுரையின் கடமையாக கருதுகிறோம்.  
இந்த கட்டுரை எதை சொல்லிஅடிக்கும்?..

1.வேலையில்லா பட்டதாரிகள் புதிய நிறுவனம் தொடங்க.
2.கல்லூரியில் படித்தவுடன் வேலை கிடைக்க
3.பள்ளி படிப்பை முடித்தவுடன் என்ன படிக்கலாம்?.
இன்று, கல்லூரியில் படித்தவுடன் ஏன் சரியான வேலை கிடைப்பதில்லை?. அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்…

கல்லூரியில் படித்தால் உடனே வேலை கிடைத்துவிடும் என்கிற காலம் மாறி, கல்லூரியில் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை என்று குமுறும் நிலையில் தற்போது நாம் இருக்கிறோம். இதற்கு தீர்வுகளே கிடையாதா? இருக்கிறது. செயல்படுத்தினால் நிச்சயம்  வெற்றி நம் கையில்.

என்ன செய்ய வேண்டும்?

1.கல்லூரியில் படித்தவுடன் வேலை கிடைக்காது என்கிற எண்ணைத்தை முதலில் விட வேண்டும்?. பாசிட்டிவ் ஆக யோசித்தால் வாழ்க்கையில் என்றும் வெற்றிதான்.

2.கல்லூரி தான் நமக்கு வேலை பெற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கக் கூடாது. நம் திறமைகளை வைத்து வேலை தேடும் போது மட்டுமே பல அனுபவங்களை பெற முடியும்.

3.படிக்கும்போது வெறும் புத்தகங்களை மட்டுமே மனப்பாடம் செய்யக்கூடாது. எதைப் படித்தாலும் புரிதல் அவசியம். மதிப்பெண் எடுப்பதை மட்டுமே நமது நோக்கமாக இல்லாமல், பாடத்தை புரிந்துகொண்டால் போதும். அப்போதுதான் படித்ததை எதிர்காலத்தில் செயல்படுத்த உதவும். 

4.தோல்விகளை நிறைய சந்திக்க வேண்டும். அப்போது தான் தோல்வியிலும் சாமர்த்தியமான செயல்களை வடிவமைக்க முடியும். 

5.படித்ததற்கு ஏற்றபடி தான் வேலை வேண்டும் என்று நினைக்காமல், கிடைத்த வேலையில் அனுபவங்களைப் பெற முயற்சிக்க வேண்டும்.

6.இன்டர்வியூவில் வெற்றி அடைய கடின உழைப்பு தேவையில்லை. ஸ்மார்ட் ஆக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். கடின உழைப்பை விட ஸ்மார்ட் வேலை மட்டுமே முன்னனியில் இருந்துவருகிறது.

7.எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும், அந்த கம்பெனியின் முழு விவரங்களை தெரியாமல் செல்ல வேண்டாம்.

8.படிக்கும்போது கல்லூரி நண்பர்களுக்கு நடுவில் நின்று பேசி பழகினால், கூச்ச சுபாவம் அகன்று நேர்முகத் தேர்வின்போது படபடப்பு நிலை ஏற்படாமல் இருக்கும். 

9.எதிர்காலத்தில் நாம் எந்த நிலையில் இருப்போம், என்ன செய்யப்போகிறோம் என்கிற பிளான் இருந்தால் எழுதில் வெற்றியை அடைந்துவிடலாம். 

10.அனுபவசாலிகளிடம் இருந்து அனுபவங்களை கற்றுக்கொள்வது அவசியம். ஆசிரியர்களிடம் அதிகமாக பேசிம் போது சில அனுபவங்களைப் பெற்று பயன்படுத்திக்கொள்ள முடியும். 

11.படித்தவுடம் வேலை கிடைத்தால் முடிந்தவரை இரண்டு வருடமாவது ஒரே நிறுவனத்தில் பணியில் இருந்தால் மிகவும் நன்று. அப்போது தான் அனுபவங்களை சரிவர கற்றுக்கொள்ள முடியும். 

12.படித்தவுடன் வேலை கிடைக்கவில்லை என்றால் நமக்கு திறமை இல்லை என்பது அர்த்தம் இல்லை. பல இளைஞர்களுக்கு நம்மால் வேலை கிடைக்கப்போவது என்பது அர்த்தம். சிறிய முதலீட்டில் நண்பர்களிடம் சேர்ந்து நிறுவனம் தொடங்கலாம். 

13.படித்துமுடித்து நல்ல வேலைகிடைக்கும் வரை, கிடைக்கும் வேலைக்காவது செல்ல வேண்டும். இல்லையெனில் எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கு தடைகளாக இருக்கும். 

வாழ்க்கையில் வெற்றியைவிட தோல்விகள் மட்டுமே அதிகமாக இருக்கும். அந்த தோல்விகளை தாண்டி வருபவர்கள் தான் சிறந்த மனிதர்களாக திகழ்கிறார்கள். தோல்வியை அனுபவமாக எடுத்துக்கொண்டு எதிர்கால லட்சியங்களை கனவில் நினைத்துக்கொண்டு செயல்பட்டால் நிச்சயம் நீங்களும் சொல்லி அடிக்கலாம் வெற்றியை..                
                        (சொல்லி அடி தொடரும்)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close