[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

தோனி நல்லவரா..கெட்டவரா..?

ms-dhoni-slow-batting-under-criticism-still-now

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனம் ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 

இந்திய அணியைப் பொறுத்தவரை ஒரு அசைக்க முடியாத விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். ஒரு கீப்பராக தனது ஸ்டைலில் பணியை செவ்வனே செய்கிறார். ஸ்டம்பிங் செய்வதிலும், கேட்ச் பிடிப்பதிலும் குறைவில்லாமல் செய்து முடிக்கிறார். பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூட, தோனியை போன்ற ஒரு வீக்கர் கீப்பரை தேடி வருகிறோம் என்று கூறினார். தோனி ஒரு கிளாசிக் விக்கெட் கீப்பர் இல்லை என்றாலும், அவரது ஸ்டைலில் அசத்துகிறார் என்று புகழ்ந்தார். 

           

அதேபோல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தான் ஒரு டி.ஆர்.எஸ் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை தோனி நிரூபித்தார். ஆட்டத்தின் 8வது ஓவரில் பும்ரா வீசிய பந்து ஆம்லா பேட்டை உரசியது போல் சென்று தோனியிடம் தஞ்சம் அடைந்தது. பந்தை பிடித்த தோனி முதலில் விக்கெட் என கத்தினார், அவரோடு அனைத்து வீரர்களும் கத்தினர். இதனால், டி.ஆர்.எஸ் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ரோகித் சர்மாவும் டி.ஆர்.எஸ். கேட்கலாம் என்று கோலியிடம் கூறினார். ஆனால், தோனியோ வேண்டாம் என்பது போல், தன் தலை ஆட்டினார். இதனால், டி.ஆர்.எஸ் கேட்கப்படவில்லை. ரிவிவ்யூவில் பந்து பேட்டில் படாமல் சென்றது தெரிய வந்தது. இதனால், இந்திய அணிக்கு ஒரு ரிவிவ்யூ தப்பியது. விராட் கோலி ரிவிவ்யூ முறையை பொறுத்தவரை ஏன் தோனியை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறார் என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. இப்படி கீப்பர் பணியை பொறுத்தவரை விமர்சனங்கள் பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறார் தோனி. 

ஆனால், பேட்ங்கை பொறுத்தவரை தோனி எப்படி பட்ட விமர்சனத்தை முன் வைப்பது என்பது தொடர்ந்து குழப்பமாகவே உள்ளது. தோனியால் பெரிய அளவிலான ஷாட்டுகளை அடிக்க முடியவில்லை என்ற விமர்சனம் இன்றளவும் இருந்து வருகிறது.

4வது ஒருநாள் போட்டியிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் தோனி 42 ரன்கள் அடித்தார். 35 ஓவரில் 200 ரன்கள் என்று இருந்த நிலையில், இந்திய அணி 330 ரன்களுக்கு மேல் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய அணி 289 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தோனியின் மந்தமான ஆட்டமே குறைவான ரன்கள் எடுக்க காரணம் என்று விமர்சனங்களை ஒரு தரப்பு நெட்டிசன்கள் கூறினர். சில நேரங்களில் இது சரியான விமர்சனம் என்றே தோன்றுகிறது ஏன் என்றால், கடைசி ஓவர் வரை பெரிய அளவில் ஷாட்கள் அடிக்காமல் நிறைய சிங்கிள்கள் அடித்து சோதித்துவிட்டார். குறிப்பாக நிறைய டாட் பந்துகள். இதனால் தான், கடைசி 10 ஓவர்களில் 60 ரன்கள் கூட எடுக்கப்படவில்லை.

இதுஒருபுறம் இருக்க, வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டு பின்னர் தொடங்கிய போது, சில நிமிடங்களிலேயே ஷிகர் தவான், ரகானே இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்பொழுதே இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகம் குறைந்துவிட்டது. அவர்களை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். குறைந்தபட்சம் சில ஷாட்களை கூட அவர் அடிக்கவில்லை.

ஷ்ரேயாஷ் ஐயரும் நிலைத்து நிற்காமல் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ தோனி பொறுமையாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையென்றால், அவரும் உணர்ச்சிவசப்பட்டு ஆட்டமிழந்திருந்தால் இந்திய அணி 250 ரன்னில் ஆட்டமிழந்திருக்கும் என்று இன்னொரு தரப்பு நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஷ்ரேயாஷ் ஐயரும் நிலைத்து நிற்காமல் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ தோனி பொறுமையாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இல்லையென்றால், அவரும் உணர்ச்சிவசப்பட்டு ஆட்டமிழந்திருந்தால் இந்திய அணி 250 ரன்னில் ஆட்டமிழந்திருக்கும் என்று இன்னொரு தரப்பு நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

4வது நாள் போட்டியின் போது ட்விட்டரில் வந்த விமர்சனங்களை பார்த்தால் தோனி நல்ல பேட்ஸ்மேனா..இல்லையா என்ற கேள்விக்கு விடை முழுமை பெறாமலே முடிகிறது. 

இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டர் தான் முக்கியமான பலமாக ஒருகாலத்தில் இருந்தது.  தோனி 2015 பிறகு மிடில் ஆர்டரில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்றே அவரது சராசரி சொல்கிறது. இருப்பினும் விமர்சனங்கள் அவரை துரத்திக் கொண்டே வருகிறது. இதில் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை பார்க்க வேண்டியுள்ளது. ஒரு தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது என்பது. முதல் போட்டியில் 3 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி, இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. மூன்றாவது போட்டியில் தான் நீண்ட நேரம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார் தோனி. 4வது போட்டியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அது விக்கெட் சரியும் இக்கட்டான நேரத்தில். அதனால், சில போட்டிகளிலாவது 4வது இடத்தில் விளையாட தோனிக்கு வாய்ப்பு அளித்து  பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது முழு பேட்டிங் திறனை சோதிக்க முடியும். 

           

அதேபோல், தோனியும் இக்கட்டான சூழலில் நிலைத்து நின்று போட்டியை பினிசிங் செய்யும் தனது பழைய திறனை விடாமல் தக்க வைத்து கொள்ள வேண்டும், சிங்கிள்களை குறைத்து ஷாட்களை அதிகமாக அடிக்க வேண்டும். அப்பொழுதுதான் ரசிகர்கள் அவருக்காக குரல் கொடுக்க முடியும். இந்திய அணியும் தற்பொழுது உள்ள சிறப்பான இடத்தை தக்க வைக்க முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close