[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

இந்திய வீரர்கள் சொதப்ப பிட்ச் மட்டும்தான் காரணமா...?

this-is-not-a-cricket-pitch-this-is-dangerous-india-vs-south-africa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

வுகேப் டன், செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துள்ளது. ஜோகன்ஸ்பெர்கில் நடைபெற்று வரும் போட்டியிலும் தோல்வியை தவிர்க்க இந்திய வீரர்கள் போராடி வருகின்றனர். 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை வெற்றி, தோல்வி மட்டுமல்லாமல் டிரா ஆவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் சம பலமுள்ள அணிகள் மோதும்பட்சத்தில் அதிக போட்டிகள் டிரா ஆவது வழக்கம். இதனால், முடிவுகள் எட்டாமல் டெஸ்ட் தொடர்களும் பல நேரங்களில் டிரா ஆகும். 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு நிலைத்து நின்று விளையாட அதிக வாய்ப்பு உண்டு. இதனால், அவர்கள் சதங்கள், இரட்டை சதங்களை விளாசுவார்கள். சில நேரங்களில் முச்சதமும் சில வீரர்கள் அடிப்பார்கள். இவர்களுக்கு பந்து வீசுவது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. 

டெஸ்ட் போட்டிகளில் அதிக நேரம் பந்து வீச வேண்டும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். களத்தில் அதிக நேரம் அவர்களால்தான் பந்து வீச முடியும். வார்னே, முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தினர். சில பிட்சுகளில்தான் வேகபந்து வீச்சு எடுபடும். 

            

போட்டி வெற்றி தோல்வி அடைய வேண்டும் என்னும் நோக்கி சில பிட்சுகள் தயாரிக்கப்படும். இதனால் போட்டி முடிவு 4 அல்லது 5வது நாளில் தெரிய வரும். சில போட்டிகள் 3 நாட்களிலே முடிவு தெரியவரும். இத்தகைய போட்டிகளில் மைதானம் பேட்டிங் செய்ய கடினமாக தயார் செய்யப்படும். அதாவது  தண்ணீர் குறைவாக பாய்ச்சி, பந்து அதிகமாக பவுன்ஸ் ஆவதற்கு தகுந்தபடி ஆடுகளத்தை தயார் செய்வார்கள்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை விளையாடியுள்ள 3 மைதனாங்களுமே பேட்டிங் செய்ய கடினமான ஒன்றாக அமைந்தது. இதனால், இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சுத்தமாக சோபிக்க முடியவில்லை. இதனால், 200 ரன்கள் எடுத்தாலே பெரியது என்ற நிலை உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளுகிறார்கள். சுழற்பந்துவீச்சாளர்களே இல்லாமல் இரு அணிகளும் களமிறங்குகிறது. அல்லது குறைந்தது ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை ஒப்புக்கு வைத்து கொள்கிறார்கள். 

            

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போது, பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்தது. தேவையில்லாமல் சிறுபிள்ளைதனமாக ரன் அவுட் ஆனார்கள். மோசமான ஷாட்களை தேர்வு செய்தார்கள் என பல விமர்சனங்கள் எழுந்தன. முதல் போட்டியில் 209, 135 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது.

            

ஆனால், இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பின்னர்தான் பிட்சு சரியில்லை என்ற விமர்சனம் அதிக எழுந்தது. ஆடுகளம் முற்றிலும் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை என்ற புகார் எழுந்தது. 

            

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பிட்ச் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், மேலும் பிட்ச் குறித்த சர்ச்சை எழுந்துவருகிறது. முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பிட்ச் குறித்து வலைதளங்களில் கருத்துக்களை கூறிவருகின்றனர். 

வழக்கமாக கணிதப்பாடம் கடினாமனது என்று கூறுவோம். அதனை ஒப்பிட்டு தென்னாப்பிரிக்கா மைதானங்களை விட கணிதப்பாடம் எளிமையானது என்று கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், சர்வதேச கிரிக்கெட் வாரியம் பிட்ச்களின் நிலையை கவனிக்கிறதா இல்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

முரளி விஜய் இன்றைய போட்டியில் 100 பந்துகளை சந்தித்ததே 100 ரன்கள் எடுத்ததற்கு சமம் என்று பலர் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். சதாரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் கூட விக்கெட்டுகளை எளிதில் எடுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். சில பிட்சுகள் மோசமாக இருக்கும், ஆனால் தென்னாப்பிரிக்கா பிட்சுகள் அபாயகரமாக உள்ளது. பேட்டிங் செய்ய முற்றிலும் முடியாத பிட்சுகளாக உள்ளது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

            

இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் முக்கியமான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்திய அணி வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதற்கு முன்பு சீக்கிரமாக அந்நாட்டிற்கு செல்ல வேண்டும். இந்திய அணி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இங்கிலாந்து நாட்டில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனால் இங்கிலாந்து நாட்டிற்கு ஜூன் மாதமே இந்திய அணி செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

இதுமிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும். இந்திய அணி தென்னாப்பிரிக்கா தொடருக்கு முற்றிலும் தயாராகவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்திய அணி சோபிக்காமல் இருப்பதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து ஜனவரி 5-ம் தேதி இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இடையில் வெறும் 10 நாட்கள் மட்டுமே இருந்தன. 

மேலும், தென்னாப்பிரிக்கா லெவன் அணியும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்தது. அதேபோல், திருமணம் நடைபெற்றதால் கேப்டன் விராட் கோலியால் முழுமையாக தயாராக முடியவில்லை என்ற கருத்தும் உள்ளது. இலங்கை அணியுடனான தொடரை இந்திய அணி தவிர்த்து இருக்க வேண்டும் அல்லது குறைத்து இருக்க வேண்டும் என பேசப்பட்டது. 

            

எனவே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி மோசமான பேட்டிங் செய்வதற்கு பிட்ச் மட்டும் காரணமல்ல; எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமல் ஒரு வலுவான அணியுடன் மோத சென்றது முக்கியமான தவறு என்றே சொல்லலாம்...

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close