[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
சிறப்புக் கட்டுரைகள் 21 Oct, 2017 10:00 PM

மெர்சல்- ஒரு மெட்ராஸ் வார்த்தை தேசிய மொழியானது

mersal-is-notional-language

சென்னையின் வட்டார வழக்குச் சொல்..மெர்சல்!
இன்றைக்கு இந்த சொல் டெல்லி வரை பிரபலமாகியிருக்கிறது..பிரபலமாக்கியதில் விஜய்யின் பங்கை விட பா.ஜ.க.வினரின் பங்கு அதிகம் என்றே சொல்லலாம். தெருக்கூத்து, நாடகக்கலையின் நீட்சியே வெள்ளித்திரை.. கலை வடிவில் அரசியல் பேசுவது என்பது சார்லி சாப்ளின் தொடங்கி இன்று வரை நடக்கக் கூடியதுதான். அதேபோல், அதற்கு எதிர்வினை வருவதும் வழமையான ஒன்றே. 

ஒரே இரவில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறார் பிரதமர். அதற்குக் காரணமாக, கறுப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிப்பு என்று சொல்லிய ஆட்சியாளர்கள் அதன் பின்னர். ஏ.டி.எம்.வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, நாம் டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறோம். பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி நாம் நகர வேண்டும் என்றனர். இவ்வாறான கருத்துகளை இவர்கள் தெரிவித்து கொண்டிருந்த நேரம்,மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் சகோதரர் பாஸ்கர் கவுடா உடல்நலக்குறைவுக் காரணமாக மரணமடைகிறார். சிகிச்சைக்கான கட்டணத்தை பணமாகப் பெற மறுத்த மருத்துவமனை நிர்வாகத்தோடு நீண்ட வாக்குவதம் செய்த பிறகு காசோலை கொடுத்து சடலத்தைப் பெற்று வந்தார் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா. டிஜிட்டல் இந்தியாவிற்கான சான்று இது என்று விமர்சனம் செய்தது எதிர்கட்சி. 

வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, சுப்ரமணிய சுவாமி, குருமூர்த்தி போன்றவர்களே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து வரும் நிலையில், ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு சில காட்சியால் அரசுக்கு எதிராக மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்படும் என்று சொல்வதும் அதற்காக அந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதும், சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்பது போன்ற முயற்சியே.தமிழக பா.ஜ.க.வினர் இதை எதிர்த்து ஏதும் பேசாமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்தப் படத்தை பார்த்து வந்தவர்கள் ஜி.எஸ்.டி. டிஜிட்டல் இந்தியா குறித்தெல்லாம் தொடர்ந்து விவாதித்திருக்க வாய்ப்பே இல்லை. இவர்களின் எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்க முயற்சி செய்கிறது காங்கிரஸ். ராகுல் ட்வீட் செய்கிறார். கருத்துச் சுதந்திரத்திற்கு தாங்கள் எப்போதும் பாதுகாவலர்கள் என்கிறார் ஸ்டாலின். ஆக, ஒரு திரைப்படத்தில் மிகச்சில நிமிடங்களே இடம் பெற்றிருந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், இன்றைக்கு டிஜிட்டல் இந்தியா குறித்தும், ஜி.எஸ்.டி குறித்தும் கிராமங்கள் தோறும் பேசச் செய்திருக்கிறது தமிழக பா.ஜ.க.

எதிர்கட்சிகள் மேடை போட்டு பேசி அரசுக்கு எதிராகச் செய்ய வேண்டிய ஒன்றை மத்திய ஆளுங்கட்சியினர் தங்களின் எதிர்ப்பால் செய்து கொண்டிருக்கின்றனர்.அரசுக்கு எதிராக வரும் வாதங்கள் குறி்த்து தொடர்ந்து பேசினால் அதுவே தங்களுக்கு எதிராக மாறிவிடும் என்பதை உணர்ந்தே பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, அமித்ஷா மகன் ஜெய்ஷா குறித்து இணைய இதழ் ஒன்றில் வெளியான கட்டுரைக் குறித்து ஊடக விவாதங்களில் எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது.ஆனால், பாஜகவின் தமிழகத் தலைமையோ மெர்சலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் தல,தளபதி என்று பிரிந்து  கிடந்த ரசிகர்களை ஒன்றாக்கியிருக்கிறது. 

ஆங்கில ஊடகங்கள் மெர்சலில் வரும் ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளில் பேசப்பட்டுள்ள வசனங்கள் என்ன என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழ் தெரியாதவர்களுக்கும் கொண்டு போய் சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. கூடவே, மெர்சலில் சொல்லப்பட்டுள்ள இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி 28 விழுக்காடு (உட்சபட்ச விழுக்காடு)  என்பதும், சிங்கப்பூரில் 7 விழுக்காடு என்பதும் இங்கே மருந்துகளுக்கு 12 விழுக்காடு என்பதும் மதுபானங்களுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை என்பதும் உண்மைதானே என்று கேள்வி எழுப்புகின்றன. 

ஆங்கில ஊடகம் ஒன்று, ஆக்ஸிஜன் இன்றி உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறந்தது உண்மைதானே எனக் கேள்வி எழுப்புகிறது. இது போன்ற கேள்விகளுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டிய பா.ஜ.க.வோ, விஜய்யை ஜோசப் விஜய் என்று விளிக்கிறது. இதுவும் புதிதல்ல பா.ஜ.க.வுக்கு.. சீமானை சைமன் என்றும், தா.பாண்டியனை தாமஸ் பாண்டியன் என்றும் அழைத்ததன் நீட்சியே இதுவும்.அரசை விமர்சிப்பது கருத்துரிமை எனில், அந்த விமர்சனத்திற்கு எதிர்வினை ஆற்றுவதும் கருத்துரிமைதானே என்ற பா.ஜ.க.வின் கேள்வியின் நியாமில்லாமல் இல்லை. ஆனால், அந்த எதிர்வினையின் வடிவமே இங்கு ஏற்புடையாதாக இல்லை. அதே சமயம், கருத்துரிமையின் காவலர்களாக இத்தருணத்தில் தங்களைக் காட்டிக் கொள்ள முயலும் காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் அதில், ராஜீவ் கொலையை கதைக்களமாகக் கொண்ட குற்றப் பத்திரிகை திரைப்படத்தை வெளியிடுவதற்கு 14 ஆண்டுகள் காத்திருந்தது போன்ற காட்சிகள் உள்ளதும் மறுக்க இயலாத உண்மையே .

செந்தில்வேல் (மூத்த செய்தி ஆசிரியர்)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close