[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சிறப்புக் கட்டுரைகள் 18 Jul, 2017 01:36 PM

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு தமிழச்சி!

south-african-tamil-female-cricketer

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் த்ரிஷா ஷெட்டி. கீப்பிங்கில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இந்த த்ரிஷா, இப்போது நடந்து வரும் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை! இவர், தமிழச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆமா. நான் தென்னாப்பிரிக்கா டர்பன்ல பிறந்து வளர்ந்தாலும் எங்க பூர்வீகம் மெட்ராஸ். அம்மா அப்படித்தான் சொன்னாங்க. இன்னும் எங்க சொந்தக்காரங்க அங்க இருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க. அவங்களை பார்க்கும் ஆசை இருக்கு. இப்பவும் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவோட விளையாடினா, நான் தென்னாப்பிரிக்காவுக்கு சப்போர்ட் பண்ணுவேன். மற்ற அணிகளோட விளையாடினா, இந்தியாவுக்குத்தான் என் ஆதரவு’ என்று குழந்தையாகப் புன்னகைக்கிறார் த்ரிஷா.

’நான் இந்திய ஆர்ஜின்ங்கறதுல எனக்கு பெருமைதான்’ என்கிற த்ரிஷா, ஏழு வயதிலேயே கிரிக்கெட் ஆட ஆரம்பித்துவிட்ட த்ரிஷா, 18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துவிட்டார்.

‘சின்ன வயசுல ஜான்டி ரோட்ஸ் பீல்டிங் பண்றதை ரசிப்பேன். அவரைப் போல எனக்கும் அங்க இங்க ஓடி போய், துள்ளிக்குதிச்சு பீல்டிங் பண்ணணுங்கற ஆசை இருக்கும். அதையே ஆரம்பத்துல பின்பற்றினேன். விக்கெட் கீப்பிங்னா மார்க் பவுச்சர் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அவரை போல கீப்பிங் பண்ணணுங்கறது என் ஆசை’ என்கிற த்ரிஷாவை, அணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக, 3 மாதம் சஸ்பெண்ட் செய்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. மீண்டும் அணிக்கு திரும்பிய த்ரிஷாவை ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கி இருக்கிறது. அதற்கு முன்புவரை ஏழாவது இடத்தில்தான் இறங்குவார்.

‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பரா இருக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, என் சாதனை குறைவுதான். மற்றவர்கள் பண்ண முடியாத ஒரு சாதனையை செய்யணும். அதை இன்னும் நான் பண்ணல. பண்ணுவேன்னு நினைக்கிறேன்’ என்கிறார் த்ரிஷா ஷெட்டி
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close