[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையா?: கே.பி.முனுசாமி விளக்கம்
 • BREAKING-NEWS இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது: ஓ.பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு கூடுதல் அறைகள் திறப்பு
 • BREAKING-NEWS வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS தமிழகத்தை தத்தெடுத்தது போன்று மோடி புதிய திட்டங்களை தந்து வருகிறார்: பொன் ராதா
 • BREAKING-NEWS ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடக்கம்
 • BREAKING-NEWS இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம்
 • BREAKING-NEWS கன்னியாகுமரியில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா படகுகள் சேவை தற்காலிக ரத்து
 • BREAKING-NEWS முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவில் அனைவரும் நடிகர்களே: முத்தரசன்
 • BREAKING-NEWS ஸ்லீப்பர்செல் எம்எல்ஏக்கள் யார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்: ஓ.எஸ். மணியன்
 • BREAKING-NEWS அனைவரும் ஒன்றுபட்டுதான் உள்ளோம்; அணியில் பிளவு என்பதே கிடையாது: தம்பிதுரை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் மக்களால் ஓரங்கட்டப்படுவார்: எம்எல்ஏ சாடல்
 • BREAKING-NEWS தொய்வு இல்லாமல் மக்கள் சேவை செய்ய அணிகள் இணைப்பு அவசியம்: ஜி.கே. வாசன்
 • BREAKING-NEWS பதவிக்காக விதை நெல்லையே விற்க அவர்கள் முடிவு கட்டிவிட்டார்கள்: நாஞ்சில் சம்பத்
சிறப்புக் கட்டுரைகள் 07 Jul, 2017 06:57 PM

இவரை நகலெடுப்பது கடினம்தான்

puthiyathalaimurai-tamilan-awards-2017-literature

வண்ணதாசனைப் பற்றி ஒருமுறை அவரது நண்பர் வண்ணநிலவன் கூறுகையில், "அரை நூற்றாண்டாக எழுதி வரும் அவரை, நான் பின்தொடர்கிறேன். அவரது எழுத்து முழுவதும் காட்சிப்படுத்துதல் நிறைந்திருக்கிறது. அவரை நகலெடுப்பது கடினம்தான்” என்றார். அப்படி நகலெடுக்க முடியாத இந்தத் தனிக்கலைஞனுக்கு புதிய தலைமுறை தமிழ் இலக்கியப் பிரிவிற்கான தமிழன் விருதை வழங்கி இருக்கிறது.

வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜியின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். பிரபல தமிழ் எழுத்தாளர் தி.க சிவசங்கரனின் மகன். சிறுகதைகளை வண்ணதாசனாகவும், கவிதைகளை கல்யாண்ஜி என்ற புனைப்பெயரிலும் எழுதுபவர். கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, ஒரு சிறு இசை போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வழங்கிய இவருக்கு ஒரு சிறு இசை 2016-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. வண்ணதாசனின் தந்தை தி.க சிவசங்கரனும் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்தான். சாகித்ய அகாதமி விருதுபெற்ற தந்தை - மகன் கூட்டணி இவர்கள்தான். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான
வண்ணதாசன், விஷ்ணுபுரம் இலக்கிய விருதும் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

”தனது எழுத்தில் சிறு சிறு சம்பவங்களைக் குறித்தும், சாமான்ய மக்களைக் குறித்து எழுதும்போது எண்ணற்ற விவரங்களுடன் எழுத்தை மெருகூட்டுபவர் வண்ணதாசன். அத்தனை விவரங்களும் பண்பாட்டுடன் ஒன்றியதாகவே இருக்கும். வண்ணதாசனின் சிறுகதைகளின் நீட்சியே அவரது கவிதைகள். அவரிடமிருந்தும், சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்தும் தள்ளி நின்று அவர்களை கவனிக்கும் எழுத்துதான் வண்ணதாசன் எழுத்து. அவரின் கதை மாந்தர்கள் சாமான்ய மனிதர்கள். மக்களுடன் பிணைந்திருக்கும் அந்த கதைகளின் வாயிலாக, வண்ணதாசனால் யாரையும் வெறுக்க முடியாது என்பதை அறியலாம்” என ஒருமுறை தேசிய நாட்டுபுற இலக்கிய ஆதரவு மையத்தின் இயக்குநர் எம்.டி முத்துக்குமாரசாமி வண்ணதாசனைப் பற்றிக் கூறினார்.

வண்ணதாசனை மட்டுமல்ல, அவரது கதை மாந்தர்களையும் யாராலும் வெறுக்க முடியாது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close