[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
 • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
 • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
 • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
 • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
 • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
 • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
 • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சிறப்புக் கட்டுரைகள் 24 Jun, 2017 01:07 PM

ஆம்பூர் பிரியாணி....ஷீர் குர்மா.... இது ரம்ஜான் ஸ்பெஷல்

ramzan-special

ஆம்பூர் பிரியாணி....ஷீர் குர்மா.... இது ரம்ஜான் ஸ்பெஷல்

ரம்ஜான் நாளன்று இஸ்லாமியர்கள் காலையிலேயே இனிப்பு செய்து தொழுகைக்கு பின்னர் அனைவரும் சாப்பிடுவது வழக்கம். அதில் நிச்சயம் ஷீர் குர்மா (Sheer Kurma) அனைவரது வீடுகளிலும் இடம்பிடித்திருக்கும்.

ஷீர் குர்மாவிற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 லிட்டர் பால் ஊற்றி பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில், 2 ஸ்பூன் நெய், 2 லவங்கம், சிறு துண்டுகளாக வெட்டிய பாதாம் 25கிராம், பிஸ்தா 25கிராம், சாரோலி 25கிராம், மற்றும் உலர் திராட்சை 25கிராம், சேர்த்து வதக்க வேண்டும், பின்னர் அதில் சேமியா சேர்த்து பிரவுன் நிறம் வரும் வரை வதக்க வேண்டும். இந்த கலவையை கொதிக்கும் பாலில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்கு காய்ந்து கெட்டியானதும், தேவையான அளவு சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி சூடாகவும் பரிமாறலாம். தேவையெனில் ஃபிரிட்ஜில் வைத்து கூலாகவும் பரிமாறலாம்.

இனி ரம்ஜான் நாளின் மெயின் டிஷ்ஷான பிரியாணி(ஆம்பூர்) செய்முறையை பார்க்கலாம்
----------

பாஸ்மதி அரிசி - 500 கிராம்
எண்ணெய் - 50 கிராம்
நெய் - 2 ஸ்பூன்
லவங்கம், -4
பட்டை - 4
ஏலக்காய் - 4
மட்டன் - 500 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தக்காளி - 2
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
தயிர் - 50 கிராம்
கேசரி பவுடர் - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி
உப்பு - தேவையான அளவு

குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணெய், சிறிதளவு நெய் விட்டு லவங்கம், பட்டை, ஏலக்காய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதங்கியதும், மட்டனுடன் தயிர் கலந்து நன்றாக வதக்கவும், பின்னர் தக்காளி, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கலவை நன்றாக கொதித்ததும், அதில் 1-2 என்ற அளவில் தண்ணீர் விட்டு, பாஸ்மதி அரிசியை போட்டு கொத்தமல்லி, புதினா இலை தூவி 2 விசில்கள் வந்ததும் இறக்க வேண்டும். 
அவ்வுளவு தான் ஆம்பூர் பிரியாணி ரெடி.........

பிரியாணியின் சைட் டிஷ்ஷான குடைமிளகாய் மட்டன் கீமா
--------

தேவையான பொருட்கள்: மட்டன் கீமா - 500 கிராம், வெங்காயம் - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2 குடைமிளகாய் - 1  காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், தயிர் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி. 

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, குடைமிளகாய் போட்டு 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். அடுத்து, கீமாவுடன் அனைத்து பொருட்களும் ஒன்று சேருமாறு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மிளகாய் தூள், வெந்தயக் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து நீர் ஓரளவு சுண்டியப் பின் இறக்கி விட
வேண்டும்.இப்போது குடைமிளகாய் மட்டன் கீமா ரெடி......

நோன்புக் கஞ்சி
----------

ரம்ஜான் பண்டிகையில் மற்றொரு ஸ்பெஷல். காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்து நோன்புக் கஞ்சி குடித்துத்தான் நோன்பு திறக்கின்றனர். நோன்புக் கஞ்சி, உடலில்
உஷ்ணத்தை குறைப்பதுடன், ஜீரண சக்‍தியை அதிகரிக்‍கும் ஆற்றல் கொண்டது. இது காலையிலிருந்து சாப்பிடாமல் சோர்வுற்று இருப்பவர்களுக்கு உடனடி சக்தியைக்
கொடுக்க வல்லது. 

அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்: பச்சரிசி - 500 கிராம் 
சமையல் எண்ணெய் - 50 மில்லி 
மட்டன் - 100 கிராம்
பெரிய வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 2-3 
தக்காளி - 2
கேரட் - 2
இஞ்சி,பூண்டு 50 கிராம், 
பாசிப்பருப்பு = 100 கிராம் 
சிறிய ஸ்பூன் அளவு சீரகப்பொடி 
1 டீஸ்பூன் மிளகாய்பொடி 
தேவையான அளவு உப்பு 
புதினா, கொத்தமல்லி - தேவையான அளவு
தேங்காய்ப் பால் அல்லது துருவிய தேங்காய்  

செய்முறை  - பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும், ஆட்டிறைச்சி கலந்து வதங்கியதும், பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளி, கேரட், மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை போட்டு பாத்திரத்தை சிறிது நேரம் மூடி வைக்கவும், அது நன்கு கொதித்ததும், கழுவி வைத்த பச்சரிசி, பாசிப்பருப்பு மற்றும் 3 மடங்கு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் அடிபிடிக்காதபடி வேக வைக்க வேண்டும். பின்னர், அதில் தேங்காய் பால் அல்லது துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் கொத்தமல்லி, புதினா தூவி இறக்கவும், சத்தான, சுவையான நோன்புக் கஞ்சி தயார். சைவ பிரியர்கள் இறைச்சியை தவிர்த்து கொள்ளலாம்.  

இவை அனைத்துமே உணவுதான்.. இஸ்லாமியர்கள்தான் என்றில்லை அனைவருமே செய்து சாப்பிடலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close