[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
சிறப்புக் கட்டுரைகள் 07 Jun, 2017 07:51 PM

உலகின் பணக்கார "வெப்பன் சப்ளையர்" மரணம்

arms-dealer

சவுதி அரேபியாவைச் சேர்ந்த உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அத்னான் கஷ்ஷோகி தனது 82வது வயதில் மரணடைந்தார். 

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் நிக்கோலஸ் கேஜ் நடித்த திரைப்படம் "லார்ட் ஆஃப் வார்ஸ்". இந்த படத்தின் நாயகன் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவன், ஆயுதங்களை இருநாடுகளுக்குள் இடையே விற்பனை செய்து உலகின் பணக்காரராக மாறுவார். இந்த கதையின் கருவே, அத்னான் கஷ்ஷோகி தான். சவுதி அரேபியா மன்னரின் மருத்துவருக்கு மகனாக பிறந்த அத்னான் கஷ்ஷோகியின் முன்னோர்கள் துருக்கி நாட்டிலிருந்து சவுதிக்கு இடம்பெயர்ந்தவர்கள். சிறுவயதிலிருந்து ஆயுதங்கள் மீது நாட்டம் கொண்டிருந்த அத்னானுக்கு தன்னுடைய குடும்ப வியாபாரத்தில் எப்போதுமே நாட்டம் இருந்ததில்லை. 1960களில் முதல்முறையாக அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை சவுதிக்கு பேரம் பேசி வெற்றிகரமாக முடித்த அத்னானுக்கு அதன்பின் தான் தன்னுடைய உண்மையான திறமை புரிந்தது. அதன்பின் பிற அரபு நாடுகளான கத்தார், குவைத், மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களை பேரம் பேசி முடித்தார். 

ஒவ்வொரு முறையில் பேரம் பேசி முடிக்கும் போது அபரிவிதமான பணம் அவர் மடியில் கொட்ட ஆரம்பித்தது. உலகின் மொத்த பணக்காரர்களையும் நண்பராக்கி கொண்டார். பல நாட்டின் ராணுவ தளபதிகளும், அதிபர்களும் கூட அவருக்கு நண்பர்களாகினர். அத்னான் கொண்டாட்டங்களுக்கு மிகவும் பெயர் போனவர். ஒவ்வொரு முறை பல லட்சம் கோடி பேரங்களை முடித்ததும் அவர் வைக்கும் பார்ட்டிகள் பல நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். அதில் பல உலக தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் கலந்துக்கொள்வார்கள். அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்பிடம் உள்ள சொகுசு கப்பலான "டிரம்ப் பிரின்ஸஸ்" அத்னானிடம் வாங்கியது தான் என்று கூறப்படுகிறது. இந்த படகு ஜோம்ஸ் பாண்ட் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அத்னான் கஷ்ஷோகி பேரம் பேசி முடித்த ஆயுதங்களால் பல லட்ச குடும்பங்கள் சின்னாபின்னமாகி இருந்தாலும், அவர் தன்னுடைய கடைசி காலம் வரை குடும்பத்துடன் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து தற்போது மறைந்துள்ளார். தன்னுடைய 82வது வயதில் அவர் மரணமடையும் போது அவர் தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார். அவர், பார்கின்சன் நோய்க்கு சிகிச்சை பெற்று பலனளிக்காமல் போனதால் மரணமடைந்துள்ளார். ஆனால் அவரால் விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கிகள் இன்றும் உலகின் ஏதோ ஒருமூலையில் ஏராளமானவர்களை அனாதையாக்கிக்கொண்டு தான் இருக்கிறது.   

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close