JUST IN
 • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார் நாளை காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்
 • BREAKING-NEWS திருவண்ணாமலை: மேல்செங்கத்தில் கிணற்றில் தூர்வாரும் பணியின் போது மண் சரிவில் சிக்கி ஒருவர் பலி
 • BREAKING-NEWS தனியார் பால் பொருட்களில் காஸ்டிக் சோடா, பிளிச்சீங் பவுடர் கலப்படம்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது: ஓஎன்ஜிசியின் காவிரி படுகை மேலாளர் பவன்குமார்
 • BREAKING-NEWS சென்னை சூளை பகுதியில் உள்ள மரக்கட்டை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
 • BREAKING-NEWS ஜூலை 1ஆம் தேதி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை
 • BREAKING-NEWS தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் லாரியில் இருந்து அமிலம் கசிந்து ஒருவர் படுகாயம்
 • BREAKING-NEWS தமிழகத்தில் இரட்டை குவளை முறை வேதனை தரக்கூடியது: வைகோ
 • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 179 புள்ளி குறைந்து 30,958ல் வர்த்தகம் முடிவு
 • BREAKING-NEWS அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
 • BREAKING-NEWS நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் எஸ்ஐ கைது
 • BREAKING-NEWS லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் குழு அமைப்பு: பிசிசிஐ
 • BREAKING-NEWS மதுரை: திருப்பரங்குன்றத்தில் லாரி மோதி பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி
சிறப்புக் கட்டுரைகள் 25 Feb, 2017 05:47 PM

ஆஸ்கர் விருது விழாவை புறக்கணிக்கும் இயக்குனர்கள்?

Cinque Terre

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்களின் இயக்குனர்கள் விழாவினைப் புறக்கணிப்பார்கள் என்று தெரிகிறது.

ஆஸ்கர் 2017ம் ஆண்டுக்கான

சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான பிரிவில் 5 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன. அவையாவன,

1. லேண்ட் ஆஃப் மைன் -மார்ட்டின் ஜாண்ட்வெல்ட் (டென்மார்க்)

2. ஏ மேன் கால்டு ஓவ் - ஹேன்ஸ் ஹோல்ம் (ஸ்வீடன்)

3. தி சேல்ஸ் மேன் - அஸ்கர் ஃபர்கார்டி (ஈரான்)

4. டோனி எர்ட்மன் -மாரென் ஆடி (ஜெர்மனி)

5. டானா - மார்ட்டின் பட்லெர் மற்றும் பெண்ட்லி டீன் (ஆஸ்திரேலியா)

இதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தடை உத்தரவு காரணமாக ஈரானைச் சேர்ந்த அஸ்கர் ஃப்ர்கார்டி ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக இந்த பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற படங்களின் இயக்குனர்களும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கும் விழாவினைப் புறக்கணிப்பார்கள் என்று தெரிகிறது.

அந்த இயக்குனர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு மட்டுமே அமெரிக்கா என்ற கருத்து இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கருத்திலிருந்து முற்றிலுமாக நாங்கள் மாறுபடுகிறோம். அமெரிக்க மக்கள் தொகையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். சிறந்த நாடு, சிறந்த பாலினம், சிறைந்த மதம் அல்லது உயர்ந்த நிறம் என எதுவுமே உலகில் இல்லை. சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதினை யார் வென்றாலும், உலகம் என்பது எல்லைகளற்றது என்றே நாங்கள் நம்புகிறோம். அதனால் உலக நாடுகள் ஒற்றுமைக்காகவும், கலைத்துறையின் சுதந்திரத்துக்கான குறியீடாகவும் இந்த விருது இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்கான போராட்டத்தினை முன்னெடுப்பவர்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள் முதல் அனைத்து துறைகளிலும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற கருத்தினை முன்வைத்துள்ள அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க 90 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார். அவரின் இந்த உத்தரவுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads