[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

உங்களுக்குத் தெரியுமா?.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...!

beauty-benefits-of-using-salt

உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. உப்பு அதிக அளவு பயன்படுத்த கூடாது என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம்.

உப்பு பல அழகு பிரச்சனைகளுக்கு அற்புத தீர்வுகளை கொடுக்கிறது. இனி உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாமே.!

* மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.

* தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து கலந்து, பின் அதனைக் கொண்டு உடலை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.

* காலில் பித்த வெடிப்பு இருந்தால் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் காலை வைத்தால் பித்த வெடிப்பு, கால் வலி நீங்கிவிடும்.

* உப்பு எண்ணெய் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. ஆதலால் சிறிதளவு உப்பை ஷாம்புவுடன் கலந்து உபயோகிப்பதால் தலையில் உள்ள எண்ணெய் பசையை நீங்கி ஆரோக்கியமாக்கும்.

* மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.

* உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் கருமை நிறமும் மறையும்.

* கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரை, மஞ்சள் மற்றும் உப்பு மூன்றையும் நன்கு அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும்.

* தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யதால் பாதங்கள் மென்மையானதாக மாறும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close